www.garudabazaar.com

"அப்பாவோட போய் 'கில்லி' படம் பார்த்தேன்.. அதுக்கப்புறம்".. ராஷ்மிகாவின் 'தளபதி Fan Girl' மொமண்ட்ஸ்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றிருந்தது.

Actress Rashmika Mandana Talks about Gilli Movie

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் பேச்சு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருந்து வந்தனர். அப்படி ஒரு சூழலில், நடிகர் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசி இருந்த விஷயங்கள் பெரிய அளவில் தற்போது வரை ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 24.12.2022 ஆம் தேதியன்று நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ,  இயக்குநர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மேடையில் நடிகர் விஜய் குறித்து பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா,  "எனது தந்தையுடன் இணைந்து கில்லி படத்தை திரையரங்கில் பார்த்தேன். படத்தை ஃபுல்லா என்ஜாய் பண்ணி, அவர் டான்ஸ் ஆடுனதை பார்த்துட்டு வந்ததுக்கு அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியலங்க. அதுக்கப்புறம் விஜய் சாரோட ஸ்பீச் கேட்கிறது, அவரோட டான்ஸ் பாக்குறது அவரை அப்படியே இமிடேட் பண்றது. அங்கே இருந்து தான் ஸ்டார்ட் ஆச்சு " என நடிகர் விஜய்யின் ரசிகையாக மாறியது குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா மேடையில் பகிர்ந்து கொண்டார். இதனை கேட்டு ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Actress Rashmika Mandana Talks about Gilli Movie

People looking for online information on Rashmika Mandana, Varisu, Vijay will find this news story useful.