Reliable Software
www.garudabazaar.com

"வந்துட்டேன்.. தமிழ் ரசிகர்களுக்கு என்னை" தமிழில் அசத்தலாக பேசிய சுல்தான் பட நடிகை ராஷ்மிகா...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. மாஸ் மற்றும் தரமான கதையம்சம் உள்ள படங்களை இவர் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடித்த படம் 'ரெமோ'. இதில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இந்த படத்தை இயக்கி இருந்தார்.  முதல் படத்திலேயே மிகப்பெரிய பிரபலங்களை ஒன்று சேர்த்து அந்த படத்தை முடித்து காட்டினார்.

Actress Rashmika cute Tamil speech about sultan

எனவே இதனை அடுத்து தற்போது நடிகர் கார்த்தி நடிக்கும் 'சுல்தான்' படத்தை இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்தப் படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமாக இருக்கிறார் தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்நிலையில் தீபாவளி பரிசாக சுல்தான் படக்குழுவினர் ஒரு சிறப்பு போஸ்டரை வெளியிட்திருந்தனர். அதில் பாவாடை தாவணியில் ராஷ்மிகவுடன், கார்த்தி அமர்ந்திருக்கும் இந்த போட்டோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே, சுல்தான் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது. பக்காவான ஆக்‌ஷன் காட்சிகள், மிரட்டும் வில்லன்கள் என தெறி கமர்ஷியல் திரைப்படமாக சுல்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுல்தான் படக்குழுவினர் தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளனர். அப்பொழுது அழகிய தமிழில் பேசிய ராஷ்மிகாவை கண்டு அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மிகவும் க்யூட்டாக பேசிய அவர் "வந்துட்டேன் தமிழ் சினிமாவுக்கு வந்துட்டேன்... தமிழ் மக்களுக்கு நிச்சயம் என்னை பிடிக்கும்" என்று கூறி நடிகர் கார்த்தி, இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் மற்றும் படக்குழுவினருக்கு தனது நன்றிகளை அழகிய தமிழில் வெளிப்படுத்தியுள்ளார். இதோ அந்த வீடியோ!

"வந்துட்டேன்.. தமிழ் ரசிகர்களுக்கு என்னை" தமிழில் அசத்தலாக பேசிய சுல்தான் பட நடிகை ராஷ்மிகா...! வீடியோ

Tags : Rashmika

தொடர்புடைய இணைப்புகள்

Actress Rashmika cute Tamil speech about sultan

People looking for online information on Rashmika will find this news story useful.