Reliable Software
www.garudabazaar.com

பிரபல விஜய் டிவி சீரியல் நடிகருக்கு திருமணம்... அவரே வெளியிட்ட நிச்சயதார்த்த புகைப்படம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த வருடம் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்தது. இதனையடுத்து பலரும் தங்கள் திருமணம் மற்றும் வீட்டு சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைத்தனர். இந்நிலையில் ஊரடங்கு தற்போது தளர்வுபடுத்தப் பட்டுள்ள நிலையில் பல பிரபலங்களும் வரிசையாக தங்கள் திருமணம் பற்றிய செய்திகளை அறிவித்து வருகின்றனர். விஜய் டிவி என்றாலே சீரியல்களும், ரியாலிட்டி ஷோக்களும் தான் மக்களுக்கு நினைவுக்கு வரும். அந்த வகையில் பல புதிய சீரியல்களை விஜய் டிவி தற்பொழுது ஆரம்பித்து ஒளிபரப்பி வருகின்றனர். அந்த வகையில் விரைவில் 'ராஜபார்வை' என்ற சீரியல் துவங்கவுள்ளது.

popualr vijay tv actor got engaged விஜய் டிவி சீரியல் நடிகருக்கு திருமணம்

இதனையடுத்து "சுந்தரி நீயும் சுந்தரன் நானும்" என்னும் தொடர சமீபத்தில் முடிவு பெற்றது. 2019 ஜூலையில் இருந்து ஒளிபரப்பாகி வரும் சுந்தரி நீரையும் சுந்தரன் நானும் தொடரை அப்துல் கப்பீஸ் என்பவர் இயக்குகிறார். வினோத் பாபு, தேஜஸ்வினி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இந்த சீரியலில் ஹீரோவுக்கு நண்பராக நடித்து வந்தவர் நடிகர் ரஞ்சித். இதற்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் யாரடி நீ மோகினி, தாய்வீடு போன்ற தொடர்களில் அவர் நடித்து வந்தார். சீரியல் முடிவு பெற்றதையடுத்து நடிகர் ரஞ்சித் தற்போது தனது திருமண வேலைகளில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வருங்கால மனைவியுடன் நிச்சயதார்த்த புகைப்படத்தை அவர் தற்போது வெளியிட்டுள்ளார்.

Tags : Ranjith

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

popualr vijay tv actor got engaged விஜய் டிவி சீரியல் நடிகருக்கு திருமணம்

People looking for online information on Ranjith will find this news story useful.