யுவனுடன் ரஷ்மிகாவின் ‘கலக்கல்’ ஸ்டெப்ஸ்.. ‘இணையத்தில்’ தீயாய் பரவும் ‘கலர்ஃபுல்’ ஸ்டில்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் திரைப்படங்களில் விஜய்தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்து தென்னிந்திய திரையுலகில் கலக்கிக் கொண்டிருந்த  ரஷ்மிகா மந்தனா அடுத்தடுத்து ஹிந்தி திரைப்படங்களில் ஒப்பந்தமாகி பாலிவுட்டிலும் தடம் பதித்தார்.

Yuvan and Rashmika Trending pics Top Tucker யுவன் ரஷ்மிகா

இந்நிலையில் தான் பாலிவுட்டின் பிரபல YRF தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில்  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில், உச்சன அமித், பாட்ஷா, ஜொனிதா காந்தி ஆகியோர் குரலில் உருவாகியிருக்கும் "Top Tucker" ஆல்பம் பாடலின் டீசர் அண்மையில் வெளியானது. இந்த டீசரில் ரஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சிகரமான தோற்றம் பலரையும் கவர்ந்திழுத்துள்ளது.

Yuvan and Rashmika Trending pics Top Tucker யுவன் ரஷ்மிகா

இயக்குநர் அமர்ப்ரீத் ஜிஎஸ் சாப்ரா இயக்கும் இந்த பாடலின் படப்பிடிப்பு தளத்தில் ரஷ்மிகாவுடன் யுவன் சங்கர் ராஜாவும் கலர்ஃபுல் ஆடைகள் அணிந்தபடி ஆடுவது போன்ற ஸ்டில்கள் வெளியாகியுள்ளன.

Yuvan and Rashmika Trending pics Top Tucker யுவன் ரஷ்மிகா

வைரலாகி வரும் இந்த ஸ்டில்களிலும்  ரஷ்மிகாவின் கவர்ச்சிகரமான உடைகளும், அவரது க்யூட்டான பாவனைகளும் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

Yuvan and Rashmika Trending pics Top Tucker யுவன் ரஷ்மிகா

கைதி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடித்துவரும் சுல்தான் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழுக்கு அறிமுகமாக உள்ள ரஷ்மிகா மந்தனா, ஹிந்தியில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து  உருவாகி வரும் மிஷன் மஞ்சு படத்தில் சித்தார்த் மல்கோத்ராக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ALSO READ: 'பட்டாசாக' வெளியான 'ஹிப் ஹாப் தமிழாவின்' அடுத்த பட FIRST LOOK!! .. ‘கெட் அப்’ வேற லெவல்!

Yuvan and Rashmika Trending pics Top Tucker யுவன் ரஷ்மிகா

People looking for online information on Amit Uchana, Badshah, Jonita Gandhi, Rashmika Mandanna, Toptucker, Yuvan Shankar Raja will find this news story useful.