ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் -முதல் முறையாக வெளிவந்த புகைப்படம் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Dec 03, 2019 03:46 PM
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை கவுதம் வாசுதேவ் மேனன் வெப் சீரிஸாக இயக்கி வருகிறார்.

குயீன் என்ற பெயரில் உருவாகும் இந்த வெப் சீரிஸ் எம்எக்ஸ் ப்ளேயர் எனும் இணைய ஒளிபரப்பு ஊடகம் வெளியிட உள்ளது.
ஏற்கெனவே கங்கனா ரனாவத்தை வைத்து இயக்குநர் விஜய், தலைவி என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்வை திரைப்படமாக உருவாக்கி வரும் நிலையில் கவுதம் மேனன், பிரசாத் முருகேசன் இணைந்து இயக்கும் இந்த வெப்சீரிஸில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி என 4 மொழிகளில் தாயாராகும் குயீன் சீரிஸின் டீசர் தற்போது வெளியாகி உள்ள நிலையில் டிரைலர் இம்மாதம் 5ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது முதன் முறையாக ஜெயலலிதாவாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் புகைப்படம் வெளியாகியுள்ளது