ப்ளாக் விடோ திரைப்படத்தின் டிரைலர் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ படங்களுக்கென்று தனி மவுசு உண்டு. அதில் அவஞ்சர்ஸ் வரிசை படங்கள் குறிப்பிடத் தகுந்த ஒன்று. இவற்றுள் ஒவ்வொரு ஹீரோவுக்கும் வெளியான படங்களை சேர்த்து இதுவரை 23 படங்கள் வெளியாகி உள்ளன.

Marvel's Black Widow trailer is out now. Scarlett Johansson plays the lead.

அதிலும் இறுதியாக வெளியான அவஞ்சர்ஸ் எண்ட் கேம் உலக அளவில் வசூலை குவித்து முதல் இடத்தில் இருந்த அவதார் படத்தை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்தது. இந்நிலையில் அவஞ்சர்ஸ் ஹீரோக்களில் ஒருவரான ப்ளாக் விடோவுக்கு தனி படம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

மார்வல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஆரம்பத்தில் இருந்தே ப்ளாக் விடோவாக நடித்த ஸ்கார்லெட் ஜோஹான்சன் நடித்துள்ளார்.  இவருடன் ஃப்ளாரன்ஸ் பியூக், டேவிட் ஹார்பர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உலக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வரும் 2020ஆம் ஆண்டு மே மாதம் வெளியாகிறது.

ப்ளாக் விடோ திரைப்படத்தின் டிரைலர் இதோ வீடியோ