Reliable Software
www.garudabazaar.com

நடிகை ரம்பாவின் இரண்டாவது மகளை பார்த்து இருக்கீங்களா.. அப்படியே ரம்பாவே தான்.. அவ்ளோ அழகு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ரம்பா. உள்ளத்தை அள்ளித்தா, காதலா காதலா உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. அதிலும் ரம்பாவின் அறிமுகப் படமான உள்ளத்தை அள்ளித்தா ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் உள்ளத்தையும் அள்ளிச் சென்றது எனலாம். நடிப்பு மட்டுமல்லாமல் நடனமும் ரம்பாவுக்கு ப்ளஸ்.  மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித் படங்களிலும் இவர் நடித்து கலக்கினார். இதுமட்டுமின்றி சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வந்த இவர், தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளார். அண்மையில் 90-களில் பிரபலமான நடிகையான ரம்பா, தனது குழந்தைகளின் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராமில் பகிர, அவரின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைந்தனர்.

actress rambha cute kids and family celebration ரம்பாவின் இரண்டாவது மகளை பார்த்து

இலங்கையை பூர்வீகமாக கொண்ட கனடாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் இந்திரன் பத்மநாபன் என்பவரை 2010-ம் ஆண்டு திருப்பதியில் கரம் பிடித்தார் ரம்பா. அதன் பிறகு நடிப்பிலிருந்து விலகிவிட்டார். இந்த தம்பதியருக்கு லான்யா, சாஷா என்ற இரண்டு அழகான பெண் குழந்தைகள் உள்ளனர். இடைப்பட்ட காலத்தில் திடீரென்று இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட, சில காலம் பிரிந்து வாழ்ந்தனர். அதன்பின் விவாகரத்து பெற முயன்று போது, கவுன்சிலிங்கில் இருவருக்கும் உள்ள பிரச்னைகள் சுமுகமாகி மீண்டும் இணைந்து வாழ்ந்தனர். அதன்பின் 2018-ம் ஆண்டு ரம்பா இந்திரன் தம்பதியருக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது. தனது வாழ்க்கையில் நடக்கும் முக்கிய சம்பவங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வரும் ரம்பாவின் இரண்டாவது மகளுக்கு சமீபத்தில் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. வீடு முழுவதும் அழகாக அலங்காரம் செய்யப்பட்ட நிலையில் இந்த விழாவின் புகைப்படங்கள் நடிகை ரம்பா தற்போது வெளியிட்டுள்ளார்.

நடிகை ரம்பாவின் இரண்டாவது மகளை பார்த்து இருக்கீங்களா.. அப்படியே ரம்பாவே தான்.. அவ்ளோ அழகு..! வீடியோ

Tags : Rambha

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

actress rambha cute kids and family celebration ரம்பாவின் இரண்டாவது மகளை பார்த்து

People looking for online information on Rambha will find this news story useful.