Reliable Software
www.garudabazaar.com

மீண்டும் சீரியலில் கலக்க வரும் நடிகை நிரோஷா... என்ன சேனல் பாருங்க.. வைரலாகும் புகைப்படங்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ராதிகா சரத்குமார். அவரது தங்கையான நிரோஷா 1988 ஆம் ஆண்டு வெளியான அக்னி நட்சத்திரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்பு ஏராளமான படங்களில் நடித்திருக்கும் அவர், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். இவர் புகழ்பெற்ற நடிகர் ராம்கியை திருமணம் செய்துகொண்டார். அதற்குப் பின்பு சின்னத்திரையில் நுழைந்த அவர் 2000-ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' என்ற தொடரில் நடித்தார். அந்த சீரியலும் மெகா ஹிட் அடித்தது நம் அனைவருக்கும் தெரியும்.

popular actress nirosha acting in this serial கலக்க வரும் நடிகை நிரோஷா

அவ்வளவு ஏன் பல 90 கிட்ஸ்களுக்கு மறக்க முடியாத ஒரு தொடர் என்றால் அது சின்ன பாப்பா பெரிய பாப்பா தான். பலருக்கும் இந்த சீரியல் பேவரைட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதன் பிறகு  2014 ஆண்டு சன் டிவியில் சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது.  அதில் நளினி, நிரோஷா, எம்.எஸ்.பாஸ்கர், மதுமிதா போன்றவர்களுடன் விஜே சித்ராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்நிலையில் நடிகை நிரோஷா கடைசியாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'உயிரே' என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் மீண்டும் சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ராஜ் டிவியில் ஒளிபரப்பாக போகும் 'ஆனந்தி' என்ற தொடரை தயாரித்து அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த தொடரில் பல புதிய நடிகர்கள் அறிமுகமாக இருக்கின்றன. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : Nirosha

மேலும் செய்திகள்

popular actress nirosha acting in this serial கலக்க வரும் நடிகை நிரோஷா

People looking for online information on Nirosha will find this news story useful.