www.garudabazaar.com

குட்டி யுவி பொறந்தாச்சு... அப்பாவான உற்சாகத்தில் யுவராஜ் சிங்! அம்மாவான பில்லா பட நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மற்றும் அவரது மனைவி ஹேசல் கீச் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ajith billa actress hazel keech yuvraj blessed with a baby boy

இந்த ஜோடி நவம்பர் 30, 2016 அன்று திருமணம் செய்து கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக வாழ்கின்றனர். சண்டிகருக்கு அருகிலுள்ள ஃபதேகர் சாஹிப்பில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர், மேலும் கோவாவில் ஆடம்பர திருமணமும் நடைபெற்றது, இதில் திரைப்படம் மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ajith billa actress hazel keech yuvraj blessed with a baby boy

இதற்கிடையில், யுவராஜ் சிங் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செவ்வாயன்று (ஜனவரி 25) தனது ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஒரு நற்செய்தியை பகிர்ந்துள்ளார். தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்ற நற்செய்தியை சமூகத்துக்கு யுவராஜ் சிங் தெரிவித்தார். தங்கள் குழந்தையின் தனியுரிமையை மதிக்குமாறு அனைவரையும் யுவராஜ் சிங் கேட்டுக் கொண்டார்.

ajith billa actress hazel keech yuvraj blessed with a baby boy

"எங்கள் ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும், இன்று கடவுள் எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையைப் கொடுத்துள்ளார் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆசீர்வாதத்திற்காக நாங்கள் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம், மேலும் குழந்தையை உலகிற்கு வரவேற்கும் போது எங்கள் தனியுரிமையை நீங்கள் (மீடியா, ரசிகர்கள்) மதிக்க விரும்புகிறோம். அன்புடன், ஹேசல் மற்றும் யுவராஜ்,” என்று கிரிக்கெட் வீரர் யுவராஜ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் எழுதி உள்ளார்.

 

ஹேசல் கீச், பில்லா படத்தில் நடிகர் அஜித்துடன் நடித்தவர், பல இந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளார். 

 

தொடர்புடைய இணைப்புகள்

ajith billa actress hazel keech yuvraj blessed with a baby boy

People looking for online information on Billa, Hazel Keech, Yuvraj Singh will find this news story useful.