www.garudabazaar.com

ஒரு காலத்துல எப்பேர்ப்பட்ட நாடக நடிகை!.. ‘வள்ளித் திருமணம்’ மாரிக்கண்ணுவின் நிலை.. வீடியோ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜன 2022, 27 :- இன்றைய காலகட்டங்களில் கோடான கோடி மனிதர்களை ஈர்க்கும் ஒரு ஜனரஞ்சகமான விஷயம் என்றால் அது சினிமாதான். அந்த சினிமாவுக்கு முன்னோடியாக இருந்தது நாடகக்கலை. நாடகக்கலையின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி, திரை ஊடகமாக, அதாவது காட்சி ஊடகமாக மலர்ந்து.

Valli Thirumanam Nadagam Maarikannu sad life story video

நாடகக்கலை

எனினும் கலாச்சாரத்தை தங்களது நாடக கலை மூலம் காப்பாற்றி வந்த நாடக கலைஞர்களின் வாழ்வு, காலத்தால் சூழப்பட்டு பல்வேறு சமயங்களில் நலிவடைந்து போவதை நிதர்சனம் என்று ஏற்றுக் கொண்டாலும், அதன் விளைவால் நாடக கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படுவதை அவ்வளவு எளிதில் கடந்து போய்விட முடிவதில்லை. அப்படித்தான் தமிழ்நாட்டின் தென் பகுதிகள் மற்றும் வட பகுதிகளில் பரவலாக அறியப்படும் பிரபல வள்ளி திருமணம் நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்ததாகக் கூறப்படும் நாடகக் கலைஞர் மாரிக்கண்ணுவின் தற்போதைய நிலை பலரையும் கனத்த இதயத்தோடு கலங்க வைத்திருக்கிறது.

Also Read: சம்பவமே இனிதான் ஆரம்பிக்குது.. வனிதா உட்பட அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 5 பேர்! தாறுமாறு..

‘வள்ளித் திருமணம்’ மாரிக்கண்ணு

ஜனாதிபதி கையால் விருது வாங்கியதாக கூறப்படும் ‘வள்ளித் திருமணம்’ மாரிக்கண்ணு, தற்போது சாலைகளில் வசிப்பவும் உணவுக்கு தவிப்பதுமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைப்பதோடு கண்கலங்கவும் வைத்திருக்கின்றன. இன்றும் தமிழ் சினிமாக்களில் பலருக்கும் முன்னோடியாக திகழும் பிரபல நடிகர்களான சிவாஜி, எம்ஜிஆர் தொடங்கி பல்வேறு கலைஞர்களும் நாடகக் கலை மூலம் திரையுலகிற்கு கிடைத்த முத்துக்கள் என்று சொல்லலாம்.

Valli Thirumanam Nadagam Maarikannu sad life story video

நெஞ்சை பிழியும் வீடியோ..

இருந்தும் நாடகம் போடுவது, நாடகக் கலையை மட்டுமே சுவாசிப்பது என்று அதில் முழுமையாக இயங்கும் கலைஞர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தனர். அப்படி, ‘வள்ளி திருமணம்’ நாடகம் மூலம் பிரபலமாக இருந்தவர் மாரிக்கண்ணு. அவரை அவருடைய பல ரசிகர்களுக்கு தெரியும். மாரிக்கண்ணு, மாரிமுத்து என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இவர் குறித்து தற்போது ரசிகர்கள் பலரும் ஆதங்கத்துடன் சமூக வலைதளங்களில் அவருடைய தற்போதைய நிலை குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் பதிவிட்டு வருகின்றனர்.

Also Read: நானும் இத போட்டுதான் தூங்க போனேன்.. இயக்குநர் பகிர்ந்த பிரபல ‘தோழர் Dolo 650’.. கவிதை!.. இன்னுமா trend ஆகிட்டு இருக்கு?

ஜனாதிபதி கையால் விருது..?

நாடகங்களில் வள்ளிதிருமணம் மட்டுமல்லாமல் திருவிளையாடல் உட்பட பல புராண கதைகளில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த மாரிமுத்துவின் நடிப்பை காண்பதற்காகவே கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் சென்றதாகச் சொல்லப்படுவது உண்டு. ஜனாதிபதி கையால் சிறந்த நடிகை என விருது வாங்கியதாக சொல்லப்படும் மாரிமுத்து சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

Valli Thirumanam Nadagam Maarikannu sad life story video

யாரையும் நம்பாதீங்க..

இத்தகைய மாரிமுத்துவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வலம் வருவதை அடுத்து, அந்த ஊர்க்காரர்களிடம் அவரைப் பற்றி விசாரிக்கும் பொழுது அவர்களோ, சற்று சுயநினைவு பாதிக்கப்பட்ட மாரிமுத்துவை அப்போதே மருத்துவமனையில் சேர்த்து இருந்தால் நல்ல முறையில் குணப்படுத்தி இருக்கலாம், அவரைக் காண்பதற்கு யாரும் வருவதில்லை, இத்தனை கஷ்டத்திலும் யார் காசு கொடுத்தாலும் வாங்க மாட்டார், காசு கொடுத்துதான் டீ வாங்கி குடிப்பார், தோன்றும்போது தான் சாப்பிடுவார், யாரையும் தொந்தரவு செய்ய மாட்டார்,  கணவர் இறந்த பின்னரே அவர் இந்த நிலைக்கு ஆளானார், ‘யாரையும் நம்பாதீர்கள்.. கவனமாக இருங்கள்!’ என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார் என்று கூறுகின்றனர்.

Valli Thirumanam Nadagam Maarikannu sad life story video

Also Read: இவர் இல்லாமலா? நெவர்!.. பலரும் மிஸ் பண்ணும் குக் வித் கோமாளி பிரபலம் திரும்பவும் வராரா?

எப்பேர்பட்ட நாடக நடிகை

இவற்றை வைத்துப் பார்க்கும் போது நடிகை மாரிக்கண்ணு என்கிற மாரிமுத்துவின் வாழ்க்கை அனுபவம் இதிலிருந்து தெரிகிறது என்கின்றனர் அந்த ஊர் மக்கள். அவருடைய நாடகங்களை அப்பகுதிகளில் பலரும் பார்த்ததாகவும் அப்பேர்ப்பட்ட நடிகை இப்படி இந்த நிலையில் இருக்கிறார் என்பது மிகவும் கவலைக்குரியதாக இருப்பதாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

ஒரு காலத்துல எப்பேர்ப்பட்ட நாடக நடிகை!.. ‘வள்ளித் திருமணம்’ மாரிக்கண்ணுவின் நிலை.. வீடியோ.. வீடியோ

Valli Thirumanam Nadagam Maarikannu sad life story video

People looking for online information on Valli Thirumanam Maarikannu, Valli Thirumanam Nadagam, Valli Thirumanam Nadagam Maarikannu, ValliThirumanam Maarikannu will find this news story useful.