www.garudabazaar.com

அரங்கம் முழுக்க தெறிக்க தமிழகத்தில் ரிலீசாகும் பாலையாவின் மிரட்டலான புதிய படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ்நாடு: பாலகிருஷ்ணா நடித்த புதிய படம் தமிழகத்தில் நாளை (27.01.2022) வெளியாக உள்ளது.

bala krishna akhanda movie releasing tamil nadu on jan 28

‘அகண்டா’ என்கிற பிரபலமான தெலுங்கு படத்தில் நடிகர் பாலகிருஷ்ணா நாயகனாக நடித்திருக்கிறார். போயபதி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்த  'அகண்டா'  தெலுங்கு படம் 02.12.2021 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ‘சிம்ஹா’, ‘லெஜண்ட்’ என தெலுங்கு சினிமாவில் இந்தக்கூட்டணி மிகப்பெரிய வெற்றிப்படங்களை ஏற்கனவே கொடுத்துள்ளது. அதே போல் அகண்டா படமும் மிகப்பெரிய அளிவில் வெற்றிப்பெற்றுள்ளது. தெலுங்கு மசாலா பட பிரியர்களுக்கு அகண்டா திரைப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இப்படம் 11 நாட்களில் உலகம் முழுவதும் ₹100 கோடி வசூல் செய்தது.

bala krishna akhanda movie releasing tamil nadu on jan 28

இப்படத்துக்கு தமன் இசையமைக்க, மிர்யாலா ரவீந்தர் ரெட்டியின் துவாராகா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படம் சமீபத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி அதிக ரசிகர்களால் குறைந்த நாட்களில் பார்க்கப்பட்ட படமாக சாதனை படைத்தது. இந்த திரைப்படம் வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்து, பாக்ஸ் ஆபிஸில் ₹200 கோடிக்கு மேல் வசூலித்து, புஷ்பா படத்திற்கு பிறகு கடந்த ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் செய்த தெலுங்குப் படமாக அமைந்தது.

bala krishna akhanda movie releasing tamil nadu on jan 28

இந்நிலையில் தமிழகத்தில் குறிப்பாக மசாலா பட விரும்பிகளுக்கு இந்த படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு காரணமாக நாளை (28.01.2022) இந்த படம் தமிழகத்தில் ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ் டப்பிங் செய்யப்படாமல் தெலுங்கில் தான் வெளியிடப்படுகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு பழனியில் உள்ள பிரபல திரையரங்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

bala krishna akhanda movie releasing tamil nadu on jan 28

தொடர்புடைய இணைப்புகள்

bala krishna akhanda movie releasing tamil nadu on jan 28

People looking for online information on Akhanda, அகண்டா, அகன்டா, பாலகிருஷ்ணா, Balakrishna will find this news story useful.