www.garudabazaar.com

கிறிஸ்துமஸை வரவேற்க தயாரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வைரலாகும் புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தயாராகும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Aishwarya Rajinikanth Ready to Celebrate Christmas Viral Photos

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும் தமிழ் சினிமாவின் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  தனுஷ் நடிப்பில் 3, கௌதம் கார்த்தி நடிப்பில் வை ராஜா வை உள்ளிட்ட திரைப்படங்களை  இயக்கியவர்.

அண்மையில் அதிக வருமான வரி செலுத்துவதற்காக, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மாநில சார்பில் வழங்கப்பட்ட கௌரவ சான்றிதழை, தமது தந்தை சார்பில் சென்று பெற்றுக்கொண்ட ஐஸ்வர்யா, பெருமையான மகளாக உணர்ந்ததாகவும் அப்போது தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

Aishwarya Rajinikanth Ready to Celebrate Christmas Viral Photos

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  இயக்கிய முசாபிர் ஆல்பம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக லால் சலாம் படத்தினை  இயக்க உள்ளார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ பாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாயாக நடிகர் விஷ்ணு விஷால் & விக்ராந்த் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Aishwarya Rajinikanth Ready to Celebrate Christmas Viral Photos

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்காரம் செய்யும் புகைப்படங்களை  வெளியிட்டு ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "27 ஆம் தேதி வரை காத்திருக்க முடியவில்லை. இந்த ஆண்டில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நேரம் இது". என‌ ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajinikanth Ready to Celebrate Christmas Viral Photos

People looking for online information on Aishwarya Rajinikanth, Christmas will find this news story useful.