ப்பா... சூப்பர் ஸ்டாரோட சும்மா கிழி பாட்டுல இவ்வளவு விஷயங்கள் இருக்கா?
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Nov 28, 2019 07:35 PM
தர்பார் படத்தின் முதல் சிங்கிளான ‘சும்மா கிழி’ பாடல் வீடியோ வெளியான 24 மணிநேரத்திற்குள் 8 மில்லியன் வியூவர்களை தொட்டு மாஸ் ட்ரெண்ட் ஆகி உள்ளது.

ரஜினியின் ஆஸ்தான பாடகர் எஸ்பிபி பேட்ட படத்தில் தலைவருக்கு ஒரு சில வரிகளே பாடினார் என்ற மனக்குறையை ‘சும்மா கிழி’ பூர்த்தி செய்திருக்கிறது. அனிருத் பீட் அனல் பறக்கிறது. ஒரு தரமான குத்தாட்டத்துக்கு ஸ்கோப் உள்ள பாடல்.
மெர்சல் படத்துக்காக எழுதப்பட்ட 'மாயோன்' பாடல் மூலம் தமிழர்கள் மனதில் இடம் பிடித்த விவேக் இந்த முறையும் தெறிக்க விட்டிருக்கிறார். பேட்ட-க்கு பிறகு ரஜினி ப்ராஜெக்டுக்கு எழுதும் விவேக் குழந்தைகள் கூட பாடக்கூடிய அளவு எளிமையான வார்த்தைகளை தேர்வு செய்து எழுதி இருக்கிறார்.
நான் தான் டா இனிமேலு
வந்து நின்னா தர்பாரு
உன்னோட கேங்கு
நான் தாண்டா லீடு
’பில்லா’ என் வரலாறு
பாத்தவன்-லாம் பலபேரு
உன்னோட பேட்டைக்கும்
நான் தாண்டா லாடு
வரிகளில் ரஜினியின் படங்களை ரெஃபரன்ஸ் காட்டி இருக்கிறார். குறிப்பாக…
நெருப்பு பேரோடு
நீ கொடுத்த ஸ்டாரோடு
இன்னிக்கும் ராஜா நான்
கேட்டு பாரு…
…வரிகளில் வரும் ஸ்டார், ரஜினிக்கு மக்கள் கொடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தையும், தர்பாரில் ஏற்று நடிக்கும் போலீஸ் வேடத்தையும் ஒருங்கே குறிக்கிறது.
விவேக் மாயோன் பாடலில் பயன்படுத்திய ஒரு வித சிக்னேச்சர் ஸ்டைலை ‘சும்மா கிழியிலும்’ புகுத்தி இருக்கிறார்.
மாயோன் பாடல் வரிகள் மீது ஒரு சாய்வான Crossword கட்டம் வரைந்தால் ’வலை தளம் உடைய வருவானே’, ‘உலக சாதனை படச்சு நடப்பான்’ என்று வாக்கியங்களாக கோர்க்கலாம்.
அதே போல வரிகளின் இறுதி எழுத்துக்களை செங்குத்தாக இணைதால் ’ரசிகனே தலைவன்’ என்று வரும்.
இதே Pattern சும்மாக் கிழியில் விசிபிளாக உள்ளது.
ரகள உட்டாக்கா ரங்குனக்குற எல்லாமே
ஜினுக்கா வந்தாக்கா ஜினுக்குனகுருமே
நிறுத்த பாத்தாக்க நினுனுக்குரும் தொடாதே
அடிச்சா எல்லாமே டண்டனக்குறனே
ர- ஜி -னி
மேலே குறிப்பிட்ட எழுத்துக்களை அனிருத் கோரஸ் மூலம் ஹைலைட் செய்திருப்பார். இசை அமைப்பாளரும், பாடலாசிரியரும் தங்கள் ஸ்பேசை தாராளமாக பகிர்ந்து பணியாற்றி இருக்கிறார்கள்.