Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

மனைவியுடன் ஏர்போர்ட்டில் G.V. பிரகாஷ்.. வரவேற்ற பிரபல தமிழ் தயாரிப்பாளர்! இதுக்கு தானா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் & அவருடைய மனைவி சைந்தவி புதுடெல்லி விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

G V Prakash Kumar with his wife Saindhavi at New Delhi Airport

Also Read | செம..தேசிய விருது வழங்கும் விழா.. டெல்லிக்கு சென்ற சூரரைப் போற்று படக்குழு! வைரல் போட்டோஸ்

கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான 68வது தேசிய திரைப்பட விருதுகள் 2022 அறிவிக்கப்பட்டது. இதில் அமேசான் டிஜிட்டல் தளத்தில் வெளியான சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்திற்கு, சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் (சூர்யா) மற்றும் சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த பின்னணி இசை உள்ளிட்ட அனைத்து மொழிப் பிரிவுகளிலும் ஐந்து விருதுகளை வென்றுள்ளது.

சூர்யா, ஜோதிகா மற்றும் ராஜசேகர் பாண்டியன் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, பரேஷ் ராவல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அமேசான் பிரைம் வீடியோவில் டிஜிட்டல் முறையில் வெளியிடப்பட்டது.

ஓய்வு பெற்ற கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறைத் தழுவியும்,  அவரது கனவு திட்டமான குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர் டெக்கான் தொடங்கப்பட்டதன் பின்னணியும் இந்த படத்தில் கதைக்களமாக இடம்பெற்றன.

இத்திரைப்படம் சிறப்புத் திரைப்படப் பிரிவில் 5 முக்கிய விருதுகளை வென்றது. அதாவது:

● சிறந்த திரைப்படம்: சூரரைப் போற்று (தமிழ்); தயாரிப்பாளர்: 2டி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்; இயக்குனர்: சுதா கொங்கரா

● சிறந்த நடிகர்: சூரரைப் போற்று (தமிழ்); நடிகர்: சூர்யா

● சிறந்த நடிகை: சூரரைப் போற்று (தமிழ்); நடிகை: அபர்ணா பாலமுரளி

● சிறந்த திரைக்கதை: சூரரைப் போற்று (தமிழ்) திரைக்கதை எழுத்தாளர் (அசல்): ஷாலினி உஷா நாயர் & சுதா கொங்கரா

● சிறந்த பின்னணி இசை: சூரரைப் போற்று (தமிழ்) - ஜீ.வி.பிரகாஷ் குமார். ஆகிய 5 தேசிய விருதுகளை சூரரைப் போற்று வென்றது.

இந்நிலையில் நாளை (30.09.2022) புது டெல்லியில் 68வது தேசிய விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.

இதற்காக ஜி.வி. பிரகாஷ் & மனைவி சைந்தவி புதுடெல்லி விமான நிலையத்தில் உள்ள புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகின்றன. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் & அவரது மனைவி சைந்தவி புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகின்றன. 2டி நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

புது தில்லி விமான நிலையத்தில் இருவரையும் 2டி நிறுவனம் சார்பில் மனோஜ் தாஸ் வரவேற்றார்.

Also Read | சூரரைப் போற்று படத்துக்காக தேசிய விருது பெறும் நடிகை ஜோதிகா? வெளியான தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

G V Prakash Kumar with his wife Saindhavi at New Delhi Airport

People looking for online information on G V Prakash Kumar, National Award Ceremony, New Delhi Airport, Soorarai Potru, Soorarai Potru Team, Suriya will find this news story useful.