சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததை அடுத்து தற்போது அந்த நாடு மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. முதன்முதலாக கொரோனா கண்டறியப்பட்ட பகுதியில் மட்டும் ஏப்ரல் 8-ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரம் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கொரோனாவால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. குறிப்பாக இத்தாலி நாட்டில் மட்டும் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர்.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சீனா மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புவதை மேற்கோள் காட்டி, சீனா மற்ற நாடுகளுக்கு இதை செய்யலாம் என ஆதங்கம் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர், '' வுஹான் தற்போது இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது. இந்த நேரத்தில் சீனா மருத்துவ தகவல்களை பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளலாம். அதேபோல மருத்துவ பொருட்களாக இல்லாமல் பணமாக பிற நாடுகளுக்கு உதவி செய்யும் பொறுப்பை சீனா எடுத்துக் கொள்ளலாம்,'' என்று தெரிவித்து இருக்கிறார்.
So wuhan is getting back to normal now. What China has to do AT LEAST now is come clean on the timeline, share key medical info, and PICK up at least some part of the cost the world is incurring. As monetary aid, not medical supplies(which wont work) https://t.co/SZ03izPShp
— Kasturi Shankar (@KasthuriShankar) March 30, 2020