“நன்றி சிவகார்த்திகேயன்” “டைரக்டர் சார்… பெருமையா இருக்குடா…” சிஷ்யனைப் பாராட்டிய அட்லி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

Director atlee applauded Don movie and director cibi

Also Read | “நிச்சயதார்த்தம் simple-ஆ… ஆனா கல்யாணத்துக்கு”… நடிகர் விக்னேஷ்காந்த் வெளியிட்ட viral pics!

டான் ஆன சிவகார்த்திகேயன்….

சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, சூரி, பிரியங்கா அருள் மோகன், ஷிவாங்கி மற்றும் பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் டான். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி  இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் அட்லியிடம் உதவியாளராக பணியாற்றியவர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ் கே புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயிண்ட்ஸ் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Director atlee applauded Don movie and director cibi

எமொஷனல்…

சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கல்லூரி மாணவனாகவும் எஸ் ஜே சூர்யா கல்லூரி முதல்வராகவும் நடித்துள்ளனர். நகைச்சுவை மற்றும் காதலுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக டான் உருவாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டான் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையிலான முரண்பாடுகளை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியுள்ளது டான் திரைப்படம். படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன், சமுத்திரக்கனி மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகிய மூவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Director atlee applauded Don movie and director cibi

சிஷ்யனைப் பாராட்டிய அட்லி…

இந்நிலையில் படத்தைப் பார்த்துள்ள இயக்குனர் அட்லி வெகுவாகப் பாராட்டி டிவீட் செய்துள்ளார். அதில் “டான் உணர்ச்சிப் பூர்வமாக குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். சிவகார்த்திகேயன் – சூப்பரான நடிப்பு, அறிமுக இயக்குனருக்கு வாய்ப்புக் கொடுத்ததற்கு நன்றி. மாஸ்டா. சிபிசக்ரவர்த்தி- டைரக்டர் சார். பெருமையாக இருக்குடா. சிறந்த படம். உணர்ச்சிப்பூர்வமாக இழுத்து செல்கிறது. லவ் யு டா… மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்” எனக் கூறி பாராட்டித் தள்ளியுள்ளார். அட்லியின் இந்த டிவீட் இப்போது பரவலாக கவனத்தைப் பெற்று வருகிறது.

Director atlee applauded Don movie and director cibi

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Director atlee applauded Don movie and director cibi

People looking for online information on Director Atlee, Director atlee applaud Don movie, Don Movie, Priyanka Mohan, Sivakarthikeyan, SivaKarthikeyan Don Movie will find this news story useful.