8 th Behindwoods Gold Medals விருது.. மழை காரணமாக மாற்றப்பட்ட தேதி.. புதிய Date எப்போ??

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெற்றிகரமான, Behindwoods Gold Medals விருது நிகழ்வுக்கு திரைத்துறை மற்றும் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது.

8th Behindwoods Gold Medals rescheduled to a new date

கமல்ஹாசன், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான், நயன்தாரா, இயக்குனர் ஷங்கர், இயக்குனர் ராஜமவுலி, சமந்தா, அனுஷ்கா ஷெட்டி, ராஷ்மிகா என ஏராளாமான திரைப் பிரபலங்கள், இந்த விருது மேடையில் கால் பதித்துள்ளனர்.

அந்த வகையில், 8 ஆவது Behindwoods Gold Medals விருது நிகழ்வு, சென்னை தீவுத்திடலில் உள்ள Island மைதானத்தில், வரும் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில், மாலை 6 மணி முதல் இரவு 11:30 மணி வரை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.

மழை காரணமாக தேதி மாற்றம்

இந்நிலையில், மே 15 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த Behindwoods Gold Medals விருது நிகழ்வு, தற்போது தொடர் மழை காரணமாக மே 21 ஆம் தேதியன்று மாற்றி வைக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக, அரங்கத்தின் பணிகள் தாமதமாகி வருவதாலும், தொடர்ந்து வரும் ஞாயிறு வரை மழையின் தாக்கம், சென்னையில் இருக்கும் என்பதாலும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் மே 15 அன்று நடைபெறுவதாக இருந்த Behindwoods Gold Medals விருது நிகழ்வு, மே 21 ஆம் தேதி மாற்றப்பட்டு, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, டிக்கெட் அல்லது விருது தொடர்பாக பிற தகவலை தெரிந்து கொள்ள bgm@behindwoods.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. http://behindwoods.com/bgm8

8th Behindwoods Gold Medals rescheduled to a new date

People looking for online information on 8 th Behindwoods Gold Medals, BGM Awards, Date Reschedule will find this news story useful.