www.garudabazaar.com

Hansika Motwani Wedding: என் ஹன்சுவ எவ்ளோ ஹேப்பியா பாத்துக்குறார்..😍 நடிகையின் வைரல் Post.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான ஹன்சிகா மோத்வானி. 2000-களில் பிரபலமான 'சக்கலக்க பூம் பூம்' தொடரில் கருணா எனும் கதாபாத்திரத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக பிரபலமானார்.

Hansika Motwani and Sohail Kathuria wedding Sriya reddy viral post

Also Read | ‘அவருனு நெனைச்சுட்டேன்.. ’.. பிரபல நடிகரின் பெயர் கொண்ட ரசிகரிடம் ட்விட்டரில் பேசிய கமல்.!

பின்னர் தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் கோலிவுட்டில் அறியப்பட்ட ஹன்சிகா, தொடர்ந்து நடிகர்கள் விஜய்யுடன் வேலாயுதம், சூர்யாவுடன் சிங்கம்-2, ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே, உதயநிதி ஸ்டாலினுடன் ஓகே ஓகே, சிம்புவுடன் வாலு உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கினார்.

தற்போது இயக்குனர் மனோஜ் தாமோதரனின் இயக்கத்தில் ஆதி கதாநாயகனாக நடிக்கும் பார்ட்னர் எனும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தில் ஹன்சிகா மோத்வானி நடித்து வருகிறார். இதை தவிர, இயக்குனர் ஸ்ரீனிவாஸ் ஓம்காரின் மை நேம் இஸ் ஸ்ருதி படத்திலும் ஹன்சிகா மோத்வானி நடித்து வருகிறார். வைஷ்ணவி ஆர்ட்ஸ் பேனரின் கீழ் நாகேந்தர் ராஜுவுடன் இணைந்து ரம்யா புருகு தயாரித்துள்ள இந்த படத்திற்கு மார்க் கே ராபின் இசையமைத்துள்ளார்.

Hansika Motwani and Sohail Kathuria wedding Sriya reddy viral post

இதேபோல் ஹன்சிகா மோத்வானி நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் இயக்கும் வெப் சீரிஸ் ஒன்றும் தயாராகி வருகிறது. இந்நிலையில்தான் நடிகை ஹன்சிகா மோத்வானி , தொழில் அதிபர் சோஹைல் கதுரியாவை மணக்கவிருக்கும் தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

Hansika Motwani and Sohail Kathuria wedding Sriya reddy viral post

இது தொடர்பில், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் தமது வருங்கால கணவருடன், நடிகை ஹன்சிகா எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட்  வைரலாகி வருகிறது. மேலும், ஹன்சிகாவிடம் சோஹைல் கதுரியா காதலை சொல்வது போலான ஃபோட்டோக்களும் வைரலாகி வருகின்றன.

Hansika Motwani and Sohail Kathuria wedding Sriya reddy viral post

இந்த புகைப்படங்களை தம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நடிகை  ‘திமிரு’ ஸ்ரேயா ரெட்டி “என்னுடைய ஹன்சுவை அவர்(சோஹைல் கதுரியா) எவ்வளவு மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்கிறார் பாருங்கள்” என பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு வைரலாகி வருகிறது. 

Hansika Motwani and Sohail Kathuria wedding Sriya reddy viral post

முன்னணி நடிகையான ஸ்ரேயா ரெட்டி, அண்மையில் அமேசான் ப்ரைமில் வெளியான சுழல் - வெப் சீரிஸில் முக்கிய முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹன்சிகாவின் திருமண தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றன.

Also Read | "புயல் அடிக்க போகுது".. ஷாருக்கான் & தீபிகா படுகோனே நடிக்கும் 'பதான்'.. அதிரடியான தமிழ் டீஸர்!

தொடர்புடைய இணைப்புகள்

Hansika Motwani and Sohail Kathuria wedding Sriya reddy viral post

People looking for online information on Hansika Motwani, Hansika Motwani and Sohail Kathuria wedding, Sohail kathuria, Sriya Reddy, Wedding Bells For Hansika Motwani will find this news story useful.