பிரபல இந்திய கிரிக்கெட் வீரரை மணக்கிறார் தென்னிந்திய நடிகை!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Dec 02, 2019 10:56 AM
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மணீஷ் பாண்டே, தென்னிந்திய திரைப்பட நடிகையான அர்ஷிதா ஷெட்டியை இன்று (டிச.2) திருமணம் செய்துக் கொள்கிறார்.

இந்நிலையில், சையது முஷ்டக் அலி தொடரின் இறுதிப்போட்டி சூரத்தில் நேற்று (டிச.1) நடைபெற்றது. இதில் கர்நாடகா அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தமிழகத்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. கர்நாடக அணி கேப்டனான மணீஷ் பாண்டேவுக்கு இந்த வெற்றி திருமண பரிசாக அமைந்துள்ளது.
தமிழில் சித்தார்த் நடித்த ‘உதயம் NH4’ திரைப்படத்தில் நடித்த தெலுங்கு திரைப்பட ஹீரோயின் அஷ்ரிதா ஷெட்டி என்னவருடன் கிரிக்கெட் வீரர் மணீஷ் பாண்டேவுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. இவர்களின் இந்த காதல் திருமணம் இன்று (நவ.2) மும்பையில் உள்ள ஹோட்டலில் நடைபெறுகிறது.
திருமணத்தை தொடர்ந்து மணீஷ் பாண்டே, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்தியாவின் டி20 சீரிஸில் விளையாடவிருப்பது குறிப்பிடத்தக்கது.