ஆண் குழந்தைக்கு தாயான சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' பட நடிகை - ரசிகர்கள் வாழ்த்து
முகப்பு > சினிமா செய்திகள்'சூது கவ்வும்', 'அச்சம் என்பது மடமையடா' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தவர் அஞ்சலி ராவ். இவர் பிரபல படத்தொகுப்பாளர் ஜோமின் என்பரை திருமணம் செய்திருந்தார்.
அஞ்சலி ராவிற்கு சமீபத்தில் தனது வளைகாப்பு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று (29/07/2020) அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனையடுத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவின் தங்கையாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக அறியப்படுகிறார். மேலும் வன்மம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார்.
Tags : Anjali Rao
மேலும் செய்திகள்
Actress Anjali rao blessed with baby boy | ஆண் குழந்தைக்கு தாயான நடிகை அஞ்சலி ராவ்
People looking for online information on Anjali Rao will find this news story useful.