www.garudabazaar.com

WOW.! - குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் பிரபல நடிகர் வெளியிட்ட போட்டோ.. குவியும் வாழ்த்துக்கள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் தனக்கு ஆண் குழந்தை பிறந்த தகவலை மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

நடிகர் ரமேஷ் திலக்கிற்கு குழந்தை பிறந்தது | Vijay's Master Actor Ramesh Thilak and wife RJ Navalakshmi blessed with a baby boy

தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருபவர் ரமேஷ் திலக். இவர் விஜய் சேதுபதியின் சூதுகவ்வும் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். பல்வேறு திரைப்படங்களில் தனது காமெடியால் அசத்திய இவர், அஜித்துடன் விஸ்வாசம், விஜய்யுடன் மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் ஆர்.ஜேவான நவலக்‌ஷ்மி என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

நடிகர் ரமேஷ் திலக்கிற்கு குழந்தை பிறந்தது | Vijay's Master Actor Ramesh Thilak and wife RJ Navalakshmi blessed with a baby boy

இந்நிலையில் நடிகர் ரமேஷ் திலக் ஒரு சந்தோஷமான விஷயத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அவர் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து தனது பதிவில், ''எனக்கு ஒரு தலைவன் பிறந்து இருக்கிறான்'' என தெரிவித்துள்ள அவர், தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது அவருடன்  எடுத்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதையடுத்து திரைத்துறையினரும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

 

தொடர்புடைய இணைப்புகள்

நடிகர் ரமேஷ் திலக்கிற்கு குழந்தை பிறந்தது | Vijay's Master Actor Ramesh Thilak and wife RJ Navalakshmi blessed with a baby boy

People looking for online information on Ajith Kumar, Baby, Master, Ramesh Thilak, Ramesh Thilak Wife, Vijay will find this news story useful.