RRR Others USA
www.garudabazaar.com

அரபிக்குத்து பாட்டுக்கு மரண குத்து டான்ஸ் ஆடிய நடிகை அஞ்சு குரியன்! வேற லெவல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அரபிக்குத்து பாடலுக்கு பட்டுச்சேலையில் நடிகை அஞ்சு குரியன் செம்மய்யான குத்து டான்ஸ் ஆடியுள்ளார்.

Malayalam Actress Anju Kurian dance for beast arabic kuthu song

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், எடிட்டர் நிர்மல்குமார் எடிட்டிங்கை கையாள்கிறார்.

Malayalam Actress Anju Kurian dance for beast arabic kuthu song

இசையமைப்பாளர் அனிருத் இசையில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து YouTube-லும் Instagram Reels-லும் பல சாதனைகளை படைத்து வருகிறது, மற்றும் சில தினங்களுக்கு முன் (19.03.2022) அன்று வெளிவந்த, கு.கார்த்திக் வரிகளில் தளபதி விஜய் பாடிய ஜாலியோ ஜிம்கானா பாடல் ரிலீஸாகி மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. பாடல்களும் அதற்கான புரோமோவும் படத்திற்கு மிகப்பெரிய ஹைப் ஏற்படுத்தி உள்ளதால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது.

Malayalam Actress Anju Kurian dance for beast arabic kuthu song

இசையமைப்பாளர் அனிருத், நடிகை சமந்தா, இயக்குனர் அட்லி, பாடகி ஜோனிதா காந்தி, வேதிகா, பூஜா ஹெக்டே, நெல்சன் மகன் ஆத்விக், திவ்யபாரதி உள்ளிட்ட பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்தனர். இந்நிலையில் மலையாள நடிகை அஞ்சுகுரியனும் இன்ஸ்டாகிராமில் அரபிக்குத்து பாட்டுக்கு நடனமாடி ரீல்ஸ் செய்துள்ளார். 

Malayalam Actress Anju Kurian dance for beast arabic kuthu song

தமிழ் புத்தாண்டு  தினத்தை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி படம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது. பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அரபிக்குத்து பாட்டுக்கு மரண குத்து டான்ஸ் ஆடிய நடிகை அஞ்சு குரியன்! வேற லெவல் வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Malayalam Actress Anju Kurian dance for beast arabic kuthu song

People looking for online information on Anju Kuriyan, Arabic Kuthu, Beast, Malayalam, Vijay will find this news story useful.