''சார் நான் கேள்விப்பட்டது உண்மையா ?'' - மேரேஜ் குறித்த சிவாவின் கேள்விக்கு பிரேம்ஜி பதில்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 01, 2019 02:46 PM
நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் அணிந்திருந்த டி-ஷர்ட்டில் ஆணும் பெண்ணும் மணக்கோலத்தில் இருப்பது போன்று வரையப்பட்டிருந்தது. அதன் கீழே கேம் ஓவர் என எழுதப்பட்டிருந்தது.

இதனையடுத்து அவருக்கு கல்யாணம் என்று செய்திகள் வெளியாகத் தொடங்கியது. இந்நிலையில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்து வரும் சுமோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டார்.
அதனை பகிர்ந்த பிரேம்ஜி சிவாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அதற்கு பதிலளித்த சிவா, நன்றி சார் நான் கேள்விப்பட்டது உண்மையா ? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த பிரேம்ஜி, சார் உங்களுக்கு என்ன பத்தி தெரியும நான் மொரட்டு சிங்கிள் சார். ஸ்டார்ட் மியூசிக் என்று பதிலளித்துள்ளார்.
😳 sir you know me I am morattu single sir 🕺 start music 🥂🍾🕺
— PREMGI (@Premgiamaren) July 31, 2019