Breaking: தமிழில் ரீமேக்காகும் நானி நடித்த கிரிக்கெட் Story - ஹீரோ யார் தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 03, 2019 12:23 AM
தெலுங்கில் நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘ஜெர்சி’ திரைப்படம் தமிழில் ரீமேக்காகவுள்ளதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது.

கிரிக்கெட்டின் உச்சத்திலிருந்து விலகிய வீரர் ஒருவர் தனது மகனின் முகத்தில் புன்னகை பூக்கச் செய்வதற்காக மீண்டும் பேட்டைத் தூக்கிக் கொண்டு ஃபார்முக்கு திரும்புவதை உணர்வுப் பூர்வமாக வெளிப்படுத்திய திரைப்படம் ஜெர்ஸி. இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படம் தமிழில் ரீமேக்காகவுள்ளது.
‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் ‘ஜெர்சி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குகிறார். இப்படத்தில் நானி கேரக்டரில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கவிருக்கிறார். ஏற்கனவே, இயக்குநர் சுசீந்திரன் இயக்கிய ‘ஜீவா’ திரைப்படத்தில் கிரிக்கெட் வீரராக விஷ்ணு விஷால் நடித்துள்ளார். மேலும், செலிப்ரிட்டி கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
கோகுல் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை ராணா தயாரிக்கிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.