ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், பிரமாண்ட இயக்குநர் என புகழப்படும் இயக்குனர் ஷங்கர், முன்னணி நடிகரும், சீயான் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவருமான நடிகர் விக்ரம் ஆகிய மூவரும் இணைந்த ஒரே படம் என்ற பெருமை 'ஐ' படத்திற்கு உண்டு. நடிகர் விக்ரம் வழியில் அவரின் மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா வழியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

இதேபோல ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீன் பாடகராக அறிமுகமாகி கலக்கி வருகிறார். இந்த நிலையில் இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜீத் ஷங்கர், துருவ் விக்ரம், அமீன் ஆகிய மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. அர்ஜீத் இன்னும் வெள்ளித்திரையில் எண்ட்ரி கொடுக்கவில்லை என்றாலும் விரைவில் அதற்கு வாய்ப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரம் இந்த ஜூனியர் கூட்டணியின் புதிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தந்தைகள் வழியில் இவர்களும் இணைந்து படம் செய்யப் போகிறார்களா? என்றும் கேள்வி எழுப்ப ஆரம்பித்து இருக்கின்றனர். அமீன் இசையில், அர்ஜீத் இயக்கத்தில், துருவ் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!
இணையத்தை தெறிக்க விடும் 'ஜூனியர்கள்' கூட்டணி... என்ன காரணம்? வீடியோ