Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

பள்ளி விழாவுக்கு சென்ற நடிகர் விஜய்... மாணவி கேட்ட கேள்விக்கு எப்படி சிரிக்கிறார் பாருங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் தளபதியாய் உயர்ந்து நிற்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்புக்கும் நடனத்திற்கும் பல கோடி பேர் ரசிகர்களாக இருக்கின்றனர். நடிகர் விஜய் கடைசியாக நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏப்ரம் மாதம் வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம், ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் ஜனவரி 13 பொங்கல் அன்று திரையரங்குகளில் நேரடியாக வெளியானது. மேலும் மக்கள் மதத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது.

Actor vijay unseen in school function பள்ளி விழாவுக்கு சென்றுள்ள நடிகர் விஜய்

இந்நிலையில் நடிகர் விஜய் பற்றி எந்த செய்தி வெளியானாலும் உடனே அது வைரலாவது வழக்கம். அவர் பொதுவாக வெளியிடங்களுக்கோ, சமூக வலைதளங்களிலோ ஆக்டிவாக இருப்பது இல்லை. ஆனாலும் அவர் செய்யும் சிறிய செயல்களும் வேற லெவல் வைரலாகி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அவரது தீவிரமான ரசிகர்கள் தான். இந்நிலையில் சமூக வலைதளமான டிவிட்டரில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு பள்ளி விழாவுக்குச் சென்று உள்ள விஜய் அங்கு மாணவி ஒருவர் அவரது குடும்பம் பற்றி கேட்க வெட்கப்பட்டு சிரிக்கிறார். அந்த மாணவி அவரது மகன் சஞ்சய் மற்றும் திவ்யாவை குறித்து கேட்க, அவர்கள் படிப்பில் மற்றும் பள்ளியில் எப்படி என்று விஜய் க்யூட்டாக பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Tags : Vijay

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor vijay unseen in school function பள்ளி விழாவுக்கு சென்றுள்ள நடிகர் விஜய்

People looking for online information on Vijay will find this news story useful.