Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

பாபநாசம் படத்தில் நடிச்ச சின்ன பெண்ணா இது... சேலையில் வெளியிட்ட போட்டோ.. குவியும் லைக்ஸ்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'த்ரிஷ்யம்' என்ற வெற்றிப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது .பின்னர் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது, 'த்ரிஷ்யம்' படத்தின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகம், அமேசான் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 19-ம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்ட நிலையில் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது விமர்சன விமர்சகர்களும் சரி பொது மக்களும் சரி படத்தை விரும்பியுள்ளனர். தமிழிலும் இதே மாதிரி இரண்டாம் பாகம் எடுக்கப்படுமா என்று இயக்குனர் ஜீத்து ஜோசப் மீது தான் அனைத்து கண்களும் உள்ளன.

Papanasam child artist latest photos go viral பாபநாசம் படத்தில் நடிச்ச பெண்ணா இது

இந்நிலையில் பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்ட த்ரிஷ்யம் படத்தில் கமல்ஹாசன், கவுதமி, நிவேதா தாமஸ், எஸ்தர் அனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாபநாசம் 2 குறித்து பேசிய இயக்குனர் ஜீத்து ஜோசப், "இது எல்லாம் த்ரிஷ்யம் 2வின் வெற்றியை பொறுத்தது, இந்த முடிவு கமல்ஹாசன் சாரிடமிருந்து தான் வரவேண்டும். பாபநாசம் இரண்டாம் பாகத்தை பற்றி அவர் யோசிப்பார் என்று நம்புகிறேன். அந்த அழைப்புக்காக நானும் காத்திருக்கிறேன்" என்று கூறியிருந்தார். இது தொடர்பாக கமல்ஹாசன் குழுவினருடன் Behindwoods நிறுவனம் பேசியபோது, "அதை தீர்க்கமாக மறுத்ததோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற திட்டங்கள் எதுவும் இல்லை" என்று கூறியிருந்தனர். இந்நிலையில் பாபநாசம் மற்றும் த்ரிஷ்யம் படங்களில் குழந்தை வேடத்தில் நடித்து வந்தவர் நடிகை எஸ்தர். இவரது சிறப்பான நடிப்பு அனைவரது கவனத்தையும் பெற்றது. இந்நிலையில் சிறு பெண்ணாக பார்த்த இவர் தற்போது சேலையில் இன்ஸ்டாகிராமில் சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அந்த சிறு பெண்ணா இது என்று வியந்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Tags : Papanasam

மேலும் செய்திகள்

Papanasam child artist latest photos go viral பாபநாசம் படத்தில் நடிச்ச பெண்ணா இது

People looking for online information on Papanasam will find this news story useful.