Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

தளபதி விஜய்யுடன் முதல் முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர்... செம குஷியில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் கடைசியாக நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏப்ரம் மாதம் வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம், ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் ஜனவரி 13 பொங்கல் அன்று திரையரங்குகளில் நேரடியாக வெளியானது. மேலும் மக்கள் மதத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது.

is popular music director to join vijay விஜய்யுடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்

இந்த நிலையில், விரைவில் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார் விஜய். முன்னதாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தில், தமன் இசையமைப்பாளராக போவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால்,அறியாத சில காரணங்களால் தற்போது நெல்சன் திலீப்குமார் ('டாக்டர்' படம் வெளியாக தயாராகி வருகிறது) படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் அனிருத் இசையமைப்பாளராகவும் இருப்பதாக கூறப்படுகிறது. தமன் ரசிகர்கள், தமன் & விஜய் காம்போவின் மாயாஜாலம் பார்க்க முடியும் என்று நினைத்து ஏமாற்றமடைந்தனர். எனினும், ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது போல் தெரிகிறது. சமீபத்தில் இசையமைப்பாளர் தமன் தனது ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்பொழுது ரசிகர்கள் சிலர் நீங்கள் மறுபடியும் தளபதியுடன் இணைந்து பணியாற்ற போகிறீர்களா என்று கேட்டதற்கு, அவர் "ஆமாம் ஆமாம்" என்று உறுதிப்படுத்துவது போல் கூறியுள்ளார். எனினும் அது தளபதி 66 அல்லது தளபதி 67 ஆ என்று தெரியவில்லை. எனினும் இந்த செய்தி தளபதி ரசிகர்களுக்குமகிழ்ச்சி அளித்துள்ளது.

Tags : Thaman, Vijay

தொடர்புடைய இணைப்புகள்

is popular music director to join vijay விஜய்யுடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்

People looking for online information on Thaman, Vijay will find this news story useful.