கஷ்டப்படும் சினிமா கலைஞர்கள்.. என் ஹோட்டலுக்கு வாங்க - பிரபல ஹீரோ செய்த உதவி.
முகப்பு > சினிமா செய்திகள்கஷ்டப்படும் சினிமா கலைஞர்களுக்காக நடிகர் விக்னேஷ் செய்துள்ள உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். மேலும் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திரைப்படத்துறையை சேர்ந்த பலரும் தங்களால் முடிந்த பண உதவியை நிவாரண நிதிக்கு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் கிழக்கு சீமையிலே, ஆச்சார்யா உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்த விக்னேஷ் சினிமா கலைஞர்களுக்காக உதவ முன்வந்துள்ளார். இதையடுத்து சென்னை ஈக்காட்டுதாங்கலில் அவர் நடத்தி வரும் சேலம் ஆர்.ஆர் பிரியாணி கடையில், கஷ்டப்படும் சினிமா கலைஞர்களுக்கு உணவு வழங்க முடிவு செய்துள்ளார். இரவு 7 மணி முதல் 9 மணி வரை, உதவி இயக்குநர், நடிகர்கள் மற்றும் கஷ்டப்படும் அனைத்து தரப்பட்ட சினிமா கலைஞர்களும், தனது ஹோட்டலுக்கு வந்து இலவசமாக சாப்பிட்டு செல்லுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
கஷ்டப்படுகிற சினிமா கலைஞர்கள் - ஈக்காடுதாங்கலில் உள்ள #சேலம்RR ஹோட்டலில் மாலை 7முதல் 9மணிவரை இலவசமாக உணவு அருந்துமாறு அழைக்கிறார் நடிகர் #விக்னேஷ். நல்ல உள்ளம். #vignesh #actorvignesh pic.twitter.com/wRzTJFdYNI
— Johnson PRO (@johnsoncinepro) April 15, 2020