''17 வருஷங்களுக்கு பிறகு தளபதி விஜய்யுடன் நடிச்சிருக்கேன்'' - 'மாஸ்டர்' குறித்து பிரபல நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.

Actor Udhay raj shares his experience with Thalapathy Vijay in Thirumalai and Master | மாஸ்டர், திருமலையில் தளபதி விஜய்யுடனான அனுபவம் குறித்து பி

அனிருத் இசையில் இந்த படத்தின் பாடல்கள் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா, கௌரி கிஷன் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

அந்த வகையில் நடிகர் உதய்ராஜ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நடிகர் உதயராஜ் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் தளபதி விஜய்யுடன் இணைந்து 'திருமலை' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தளபதி விஜய்யுடனான அனுபவங்களை உதய் ராஜ்  தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு பகிர்ந்துள்ளார். அதில், ''தளபதி விஜய் அண்ணாவுடன் இணைந்து 17 வருடங்களுக்கு பிறகு மாஸ்டர் படத்தில் நடித்துள்ளேன். அப்போ திருமலை, இப்போ மாஸ்டர். என் இயக்குநரும் சகோதரருமான லோகேஷ் கனகராஜிற்கு நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor