Beast Others
www.garudabazaar.com

”ஒரு மனிதனின் வாழ்க்கையில்….” – புகைப்படத்தைப் பகிர்ந்து நெகிழ்ந்த நடிகர் சூரி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் அஞ்சலி நடிக்கும் படத்தில் நடிகர் சூரி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

Actor soori very emotional with director Ram movie

“ Are You Ready”…. KVRK படத்தின் செம்ம அப்டேட்டை வெளியிட்ட பிரபல இசை நிறுவனம்!

இயக்குனர் ராமின் ஐந்தாவது படம்…

கற்றது தமிழ், 'தங்க மீன்கள்', தரமணி’, 'பேரன்பு' ஆகிய உணர்வுப்பூர்வமான படங்களைக் இயக்கியவர் இயக்குநர் ராம். பேரன்பு படத்துக்குப் பிறகு இப்போது இவர் மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தில் நிவின் பாலி, அஞ்சலி நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். கலை இயக்கத்தை உமேஷ் ஜே குமார் கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடியில் தொடங்கியது.

Actor soori very emotional with director Ram movie

இயக்குனர் ராம்மும் இரயிலும்…

அடுத்தடுத்து கேரளாவிலும் சென்னையிலும் படப்பிடிப்பை நடத்தினார் இயக்குனர் ராம். சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டி பகுதியில் ரயில் செட் அமைக்கப்பட்டு பல காட்சிகள் படமாக்கப்பட்டன. ஏஆர்ஆர் ஃபிலிம் சிட்டியில் கலை இயக்குநர் உமேஷ் ஜே. குமார் தத்ரூபமாக உருவாக்கிய ரயில் செட் வடிவமைக்கப்பட்டு, அதில் நிவின்பாலி, சூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இது சம்மந்தமான பல படப்பிடிப்புத் தளப் புகைப்படங்களைப் படக்குழுவினர் பகிர்ந்திருந்தனர். இயக்குனர் ராம் இயக்கும் எல்லாப் படங்களிலும் ரயில் ஒரு கதாபாத்திரமாகவே உருவாக்கப்பட்டு இருக்கும்.

Actor soori very emotional with director Ram movie

நெகிழ்ந்த சூரி…

இந்நிலையில் தற்போது படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையடுத்துப் படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்று வருகின்றன. இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சூரி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘ஒரு மனிதனின் வாழ்க்கையில் தனது ரயில் பயணம் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். அதேபோல் இந்த படத்திற்கான எங்களுடைய ரயில் பயணம் நேற்றோடு நிறைவடைந்தது..பிரியாவிடை பெறுகிறேன்...

It's a wrap from V House Productions’ எனக் கூறியுள்ளார்.

Actor soori very emotional with director Ram movie

சூரியின் ‘விடுதலை’

சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குகிறார். அந்த படத்தில் சூரி போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

BBUltimate வின்னரை சந்தித்த ஜுலி …. ஜூலிக்கு ஐ லவ் யூ சொன்ன BB பிரபலம் – வைரல் reunion pics!

தொடர்புடைய இணைப்புகள்

Actor soori very emotional with director Ram movie

People looking for online information on Director Ram, Director Ram movie, Nivin Pauly, Soori will find this news story useful.