www.garudabazaar.com

'நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாருமில்ல'.. சிவகார்த்திகேயனை திக்குமுக்காட வைத்த சூரி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி நடிகர் சூரி கொடுத்த சர்ப்ரைஸ் இணையத்தை கலக்கி வருகிறது.

Soori wishes actor Sivakarthikeyan a happy birthday

காமெடியனாக தொடங்கி தற்போது ஹீரோவாக வலம்வரும் சிவகார்த்திகேயன், இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி, 1985 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பிறந்தவர். இவரது தந்தை போலீஸ் அதிகாரி. இன்ஜினியரிங் மாணவரான இவர், எதிர்பார்ப்பு இல்லாமல் போய்தான் பார்ப்போம் என  கலந்துகொண்ட நிகழ்ச்சி தான் 'கலக்கப் போவது யாரு'. இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக களமிறங்கி வெற்றிவாகை சூடிய சிவகார்த்திகேயன், பின்னர் தனது திறமையால் விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக மாறினார்.

"ஜோக்கர் ஆன பீஸ் ஹீரோ ஆனேன்"

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை மட்டும் அல்ல, தான் இருக்கும் இடத்தில் எல்லோரையும் கலகலப்பாக வைத்து கொள்பவராக திகழ்ந்தார். விஜய் டிவியின் காமெடி கிங்  என்று அழைக்கப்பட்டவர். தனது டான்ஸ் திறமையை வெளிப்படுத்த ஜோடி நம்பர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அது மட்டுமின்றி, விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார். பின்பு ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படத்தில் தனுசுக்கு நண்பனாக ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானாலும், மெரினா திரைப்படம் அவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. முதல் படத்திலேயே குழந்தைகளையும், இளைஞர்கள் மனதை கவர்ந்தார்.

அமேக வரவேற்பை பெற்ற 'அரபிக் குத்து'

இதனைத்தொடர்ந்து  எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன் . நடிகராக மட்டுமின்றி பின்னணி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட திறமையாளராக இருக்கிறார். சமீபத்தில், விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் 'அரபிக் குத்து' பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த 'அரபிக் குத்து' என்ற பாடலை எழுதியவரும் சிவகார்த்திகேயன் தான்.

சூரியின் அன்பு தம்பி சிவா

இந்நிலையில், சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி, நடிகர் சூரி "என் அன்பு தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்று சமூகவலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் குதூகலமாகியுள்ளனர். பலரும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூரி சிவகார்த்திகேயனுடன் இணைந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சூரிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் படங்களில் பக்காவாக கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகும். இருவரும் நடிகர்கள் என்பதையும் தாண்டி நெருங்கிய நண்பர்களாகவும் வலம் வருகிறார்கள்.

Soori wishes actor Sivakarthikeyan a happy birthday

சூரி - சிவகார்த்திகேயன் வெற்றி கூட்டணி

இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கலாய்த்து வருகிறார்கள். தற்போது சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் நடித்து வருகிறார் சூரி. சூரி வீட்டில் ஒரு விஷேசம் என்றால் சிவகார்த்திகேயன் இல்லாமல் இல்லை. தனது சகோதரனாகவே சூரி பாவித்து வருகிறார். இந்த அன்புக்கு ஈடு இணை ஏதும் கிடையாது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், சிவகார்த்திகேயன் கைவசம் அயலான், டான், சிங்கப்பாதை போன்ற படங்கள் உள்ளன.  கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது தவிர தெலுங்கில் அனுதீப் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Soori wishes actor Sivakarthikeyan a happy birthday

People looking for online information on Habby birthday, Instagram, Sivakarthikeyan, Soori, Viral photo will find this news story useful.