www.garudabazaar.com

Mahaveeryar: அப்படியே ஆளே மாறிப் போன நிவின் பாலி.. படு வைரல் ஆகும் first look poster

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 13, பிப்ரவரி 2022 : நிவின் பாலி நடிப்பில் ‘மாஹாவீர்யார்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. புகழ்பெற்ற எழுத்தாளர் M.முகுந்தன் கதையிலிருந்து தழுவி, அப்ரித் ஷைனி இயக்கத்தில் உருவான ‘மாஹாவீர்யார்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Nivin Pauly Mahaveeryar movie first look poster viral tredning

முதன்மை கதாபாத்திரங்கள்..

நிவின் பாலி மற்றும் ஆஷிஃப் அலி முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்படம், ஃபேண்டஸி, டைம் ட்ராவல், சட்ட நுணுக்கங்கள் மற்றும் சட்டப் புத்தகங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான பேரனுபவமாக இருக்குமென்று திரைப்படக்குழு உறுதியளித்துள்ளது.

அறிமுக விழா

Pauly Jr Pictures நிறுவனம் சார்பில் நிவின் பாலி மற்றும் Indian Movie Makers சார்பில் PS சம்னாஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். கொச்சியில் நடைபெற்ற விழாவினில் எழுத்தாளர் M.முகுந்தன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார். திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குநர் அப்ரித் ஷைனி, ஆஷிஃப் அலி, ஷான்வி ஶ்ரீவஸ்தவா மற்றும் இணை தயாரிப்பாளர் PS சம்னாஸ் ஆகியோர் இவ்விழாவினில் பங்கேற்றனர்.

‘மாஹாவீர்யார்’

‘மாஹாவீர்யார்’ திரைப்படம் வர்த்தக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்ற 1983 மற்றும் ஆக்‌ஷன், ஹீரோ பிஜூ படங்களுக்கு பிறகு நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் அப்ரித் ஷைனி இணைந்து பணியாற்றும் மூன்றாவது திரைப்படம் ஆகும். நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் அப்ரித் ஷைனி ஆகியோர் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு இப்படத்தில் மீண்டும் இணைகிறார்கள். இப்படம் கொரோனா கட்டுப்பாடுகள் நிலவிய கடுமையான காலகட்டத்தின் மத்தியில், ராஜஸ்தான், கேரளா ஆகிய இடங்களில் பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள்

அப்ரித் ஷைனி திரைக்கதை எழுதியுள்ள இப்படத்தில் லால், லாலு அலெக்ஸ், சித்திக், ஷான்வி ஶ்ரீவஸ்தாவா, விஜய் மேனன், மேஜர் ரவி, மல்லிகா சுகுமாரன், கிருஷ்ண பிரசாத், சுராஜ் S குரூப். சுதீர் கரமனா, பத்மராஜன் ரதீஷ், சுதீர் பரவூர், கலாபவன் பிரஜோத், பிரமோத் வெலியனாடு, ஷைலஜா P அம்பு மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப குழு விபரம்

சந்துரு செல்வராஜின் ஒளிப்பதிவு, இஷான் சாப்ராவின் இசை, மனோஜின் எடிட்டிங்கில் உருவாகும் இந்த படத்துக்கு புரொடக்சன் கண்ட்ரோலராக ஷ்யாம் லால் பணியாற்றியுள்ளார்.

Also Read: சமுத்திரகனி & பிரபல BiggBoss வின்னரின் நடிப்பில் உருவாகும் ‘பப்ளிக்’ திரைப்படம்.. பரபரப்பை கிளப்பும் SneakPeak

தொடர்புடைய இணைப்புகள்

Nivin Pauly Mahaveeryar movie first look poster viral tredning

People looking for online information on நிவின் பாலி, மாஹாவீர்யார், Mahaveeryar, Nivin Pauly will find this news story useful.