www.garudabazaar.com

வெற்றிமாறனை தொடர்ந்து ராம் படத்தில் சூரி! வெளிவந்த ஷூட்டிங் ஸ்பாட் BTS புகைப்படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: இயக்குனர் வெற்றிமாறனை அடுத்து நடிகர் சூரி இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிக்கும் BTS புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

vetrimaaran actor soori joined with director ram and nivin pauly

போனிகபூர் தயாரிப்பில் RJ பாலாஜி நடிக்கும் புதிய படத்தின் செம்ம தலைப்பு இது தான்!

இயக்குனர் ராம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர் ஆவார். கடைசியாக தமிழ்- மலையாளத்தில் நடிகர் மம்முட்டியை வைத்து பேரன்பு படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. மலையாளத்தில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதுவரை இயக்குனர் ராம் 4 படங்களை இயக்கி உள்ளார்.

அவர் இயக்கிய கற்றது தமிழ் திரைப்படம் இன்று தமிழ் சினிமாவில் கல்ட் அந்தஸ்தை பெற்றுள்ளது. இரண்டாவது படமான தங்க மீன்கள் தேசிய விருதை வென்றது. மூன்றாவது படமான தரமணி திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது மட்டுமல்லாமல், இப்பொழுதும் சமூக வலைதளங்களில் கொண்டாடப்படும் படமாக உள்ளது.

vetrimaaran actor soori joined with director ram and nivin pauly

 

vetrimaaran actor soori joined with director ram and nivin pauly

 

தற்போது தனது 5வது படமாக நிவின் பாலி- அஞ்சலி நடிப்பில் புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார்.  கலை இயக்குனர் உமேஷ் குமார் கலை இயக்குனராக பணியாற்றுகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் (04.10.2021) தனுஷ்கோடி கடற்கரையில் துவங்கியது. படப்பிடிப்பு துவங்கும் முன் எடுத்த BTS புகைப்படங்களை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டு இருந்தார். அஞ்சலி - நிவின்பாலி சம்பந்தப்பட்ட காட்சிகள் முதல் நாளில் படமாக்கப்பட்டது.

vetrimaaran actor soori joined with director ram and nivin pauly

 

vetrimaaran actor soori joined with director ram and nivin pauly

இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் நடிகர் சூரி இன்று (01.02.2022) படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இது குறித்து டிவிட்டரில் சில BTS புகைப்படங்களை பகிர்ந்து "இன்று இனியதொரு தொடக்கம்.  இயக்குனர் அண்ணன் ராம் மற்றும் பிரதர் நிவின் பாலி யுடன் முதல்முறையாக 'பயணிப்பதில்' பெரு மகிழ்ச்சி. அண்ணன் சுரேஷ் காமாட்சிக்கு நன்றி" என டிவீட் செய்துள்ளார். 

vetrimaaran actor soori joined with director ram and nivin pauly

 

vetrimaaran actor soori joined with director ram and nivin pauly

இந்த படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு இயக்குனர் மிஷ்கினும் இன்று வருகை புரிந்துள்ளார். ரயில் பயணம் சம்பந்தப்பட்ட காட்சிகள் செட் அமைக்கப்பட்டு, க்ரீன் மேட் தொழில் நுட்பத்தில் படமாக்கப்பட்டு வருகின்றன.

எதற்கும் துணிந்தவன் எதுல Release? ஒட்டுமொத்த வதந்திகளுக்கும் ஒரே full Stop வைத்த இயக்குனர்!

தொடர்புடைய இணைப்புகள்

vetrimaaran actor soori joined with director ram and nivin pauly

People looking for online information on Actor Soori, இயக்குனர் ராம், நடிகர் சூரி, Director Ram, Nivin Pauly, Vetrimaaran will find this news story useful.