IndParty
www.garudabazaar.com

மாதவன் நடிப்பில் உருவாகிறதா ரதன் டாடா Biopic.?!! நடிகர் சொன்ன தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாதவன் நடிப்பதாக இணையத்தில் வெளியான போஸ்டர் குறித்து அவர் பதிவிட்டுள்ளார். 

ரதன் டாடா கதையில் நடிக்கிறாரா மாதவன் | Actor madhavan clarification on acting in ratan tata biopic

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் மாதவன். இவர் நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. மேலும் இவர் தற்போது மாறா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த சார்லி படத்தின் ரீமேக்காகும். 

ரதன் டாடா கதையில் நடிக்கிறாரா மாதவன் | Actor madhavan clarification on acting in ratan tata biopic

இந்நிலையில் நடிகர் மாதவன் அடுத்ததாக ரதன் டாடாவின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. மேலும் இப்படத்தை சுதா கொங்கரா இயக்க போவதாகவும் போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

ரதன் டாடா கதையில் நடிக்கிறாரா மாதவன் | Actor madhavan clarification on acting in ratan tata biopic

இதை தொடர்ந்து நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''இது முற்றிலுமாக ஒரு தவறான செய்தி. யாரோ சில ரசிகர்கள் விருப்பப்பட்டு இந்த போஸ்டர்களை உருவாக்கியுள்ளனர். அப்படி எந்த பிராஜக்ட் குறித்து நான் அடுத்து விவாதிக்க கூடவில்லை'' என தெரிவித்து இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

 

ரதன் டாடா கதையில் நடிக்கிறாரா மாதவன் | Actor madhavan clarification on acting in ratan tata biopic

People looking for online information on Madhavan, Ratan Tata Biopic will find this news story useful.