"ஆரம்ப காலத்துல தல அஜித் செய்த உதவி" - 20 ஆண்டுகள் கழித்து மனம் திறந்த நடிகர் மாதவன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 2000-ஆம் ஆண்டு வெளிவந்த படம் அலைபாயுதே. வந்த நாள் முதல் இன்றுவரை இளைஞர்களின் காதல் காவியமாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக நடிகர் மாதவனுக்கு முதல்படம்.  இருந்தாலும் மாதவன், ஷாலினியின் அசாத்திய நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்தது.

அலைபாயுதே தல அஜித் மனம் திறந்த நடிகர் மாதவன் Actor Madhavan shares About Thala ajith help

இந்த நிலையில் நேற்றைய தினம் அலைபாயுதே படத்தின் 20 ஆண்டுகள் முடிந்த நிலையில் ரசிகர்கள் பலரும் படத்தை ட்ரெண்டாக்கினர். நடிகர் மாதவன் தற்போது கொடுத்திருக்கும் பேட்டியில் தனது ஆரம்ப கட்டங்களில் தல அஜித் தனக்குஉதவிகளை செய்வதாகவும், கார் விமானங்கள் குறித்த ஆர்வத்தில் தனக்கும் தல அஜீத்துக்கும் ஒரே ரசனை என்றும் கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்த அவர் அலைபாயுதேவின் மிகப்பிரபலமான ரயில் சீன் பற்றி கூறியுள்ளார். தான் தனது மனைவி அப்போதைய காதலி சரிதாவை நினைத்துக்கொண்டும்  ஷாலினி தனது காதலர் அஜித்தை நினைத்துக் கொண்டும் தான் அந்த சீனில் நடித்ததாக கூறியுள்ளார். இந்த செய்தி ரசிகர்கள் பலருக்கும் மிகுந்த ஆச்சரியத்தை அளித்துள்ளது. அதன்பிறகு இருவரும் தங்கள் காதலர்களை மணந்து குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor