காரில் இருந்து வெளியே இழுத்து தள்ளப்பட்ட டிவி நடிகை - ஃபேஸ்புக் புகாரையடுத்து நடவடிக்கை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டிவி சீரியல் ஷூட்டிங்கிற்காக உபர் நிறுவனத்தின் வாடகை காரில் சென்ற நடிகையை காரில் இருந்து வெளியெ தூக்கி வீசியதாக கார் டிரைவர் ஜான்ஷெட் கைது செய்யப்பட்டுள்ளார்.

Popular Bengali TV actress Swastika Dutta pulled out of Uber cab and threatened

பெங்காலி நடிகையான சுவஸ்திகா தத்தா, திரைப்படங்களிலும், டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். கொல்கத்தாவின் டில்ஜலா பகுதியில் வசிக்கும் சுவஸ்திகா, தனது வீட்டில் இருந்து கடந்த புதன்கிழமை ஷூட்டிங்கில் கலந்துக் கொள்ள சவுத் கொல்கத்தாவில் உள்ள ஸ்டூடியோவிற்கு செல்ல உபர் நிறுவனத்தில் வாடகை கார் ஒன்றை முன்பதிவு செய்துள்ளார்.

கார் வந்ததும் அதில் ஏறி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றபோது பாதி வழியிலேயே டிரிப்பை கேன்சல் செய்த டிரைவர், சுவஸ்திகாவை காரில் இருந்து கீழே இறங்குபடி கூறியுள்ளார். மறுத்ததற்கு, வேறு வழியாக காரை ஓட்டிய டிரைவர், வலுக்கட்டாயமாக நடிகை கீழே இழுத்து தள்ளி, ஆபாச வார்த்தைகளால் பேசியுள்ளார்.

இதனையடுத்து, ஷூட்டிங்கிற்கு செல்ல நேரம் ஆனதால், தனது தந்தைக்கு தகவல் கொடுத்துவிட்டு, சுவஸ்திகா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் டிரைவரின் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை பகிர்ந்தார். அவரது ஃபேஸ்புக் புகாரையடுத்து, கொல்கத்தா போலீஸ் விரைந்து நடவடிக்கை எடுத்து, புகார் கொடுத்த 3 மணி நேரங்களில் டிரைவரை கைது செய்தனர். மேலும், அவர் உபர் நிறுவன டிரைவிங் ஆப்-ல் இருந்து நீக்கப்பட்டார்.