இந்த விஷயத்தை இத்தனை நாளா மறைச்சுட்டாரே..! பாய்ஸ் நடிகர்கள் செம ஜாலி அரட்டை.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரத் வெளியிட்ட வீடியோவுக்கு நகுல் செம கமன்ட் அடித்துள்ளார். 

பாய்ஸ் பட நடிகர்கள் ஜாலி அரட்டை | boys actors nakkhul and bharath jolly moments in instagram

2003-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாய்ஸ். இத்திரைப்படத்தின் மூலம் சித்தார்த், பரத், தமன், நகுல் உள்ளிட்டோர் அறிமுகமானார்கள். இதையடுத்து இவர்கள் பல்வேறு படத்தில் ஹீரோவாக நடித்துள்ளனர். தற்போது சித்தார்த், பரத், நகுல் உள்ளிட்டோர்கள் ஹீரோவாக நடிப்பதில் பிசியாக இருக்க, தமன் இசையமைப்பாளராக கலக்கி கொண்டு இருக்கிறார். 

இந்நிலையில் நடிகர் பரத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ராம் படத்தில் இடம்பெற்ற ஆராரிராரோ பாடலை அவர் பாடிய வீடியோவை பகிர்ந்து கொண்டார். இதை பார்த்த நகுல், ''ரொம்ப அருமையாக பாடி இருக்கிறாய். உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. இப்படி ஒரு திறமை உனக்குள் இருப்பது இதுவரை எனக்கு தெரியாது'' என பதிவிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்த நகுல், குரண்டைன் நேரம் என்னை கொல்கிறது என பதிவிட்டுள்ளார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Yuvan rocks !!

A post shared by Bharath (@bharath_niwas) on

Entertainment sub editor