www.garudabazaar.com

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் ஹீரோயின் இவரா? வைரலாகும் புகைப்படம்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

actor kamal haasan vikram movie heroine update

இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர்.

actor kamal haasan vikram movie heroine update

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது.

actor kamal haasan vikram movie heroine update

படத்தில் பங்கு பெறும் CAST & CREWவை இறுதி செய்யும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் படக்குழுவினர்.

actor kamal haasan vikram movie heroine update

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புதிய பதிவில் "Code Red" என குறிப்பிட்டுள்ளார். இந்த வார்த்தை ஏற்கனவே விக்ரம் படத்தின் முதல் லுக் போஸ்டரில் உள்ள வார்த்தையாகும். 

 

இதனால் பரவசமடைந்த ரசிகர்கள், நடிகை ஆண்ட்ரியாவின் பதிவின் பின்னூட்டத்தில் விக்ரம் படத்தில் நீங்கள் நடிக்கிறீங்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

actor kamal haasan vikram movie heroine update

நடிகை ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு-2 பசத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே கமல்ஹாசனுடன் விஸ்வரூபம், உத்தமவில்லன் படங்களில் ஆண்ட்ரியா இணைந்து நடித்துள்ளார். 

தொடர்புடைய இணைப்புகள்

actor kamal haasan vikram movie heroine update

People looking for online information on Andrea, Kamal Haasan, Vikram will find this news story useful.