www.garudabazaar.com

சிம்புவின் தாயாருக்கு குவியும் பாராட்டுகள்.. தாய்மை உள்ளத்துடன் செய்த நெகிழ்ச்சி காரியம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கர்ப்பம் தரித்த உடும்பை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார் தயாரிப்பாளர் உஷா ராஜேந்தர்.

actor silambarasan mother usha rejendar viral activity

பிரபல பன்முக கலைஞர் டி.ராஜேந்தரின் மனைவியும், சிலம்பரசன் டி.ஆரின் தாயாருமானவர் உஷா ராஜேந்தர். இவரது டி.ஆர்.கார்டன் சென்னை மதுரவாயல் அருகே உள்ளது.

கடந்த சில நாட்களாக டி.ஆர்.கார்டனில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்த நிலையில், ஒரு உடும்பு அந்த இடத்தில் பதுங்கி இருப்பதை கண்ட பணியாளர்கள் தயாரிப்பாளர் உஷா ராஜேந்தரிடம் உடனே தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த அவர் உடும்பு கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்தார். 

இதனை அடுத்து மதுரவாயல் காவல் நிலையத்தை அணுகி உடும்பு இருப்பதாக கூறியதும், வேளச்சேரியில் உள்ள வனவிலங்கு அதிகாரிகளுக்கு உடனே விஷயம் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் பாதுகாப்பாக அந்த உடும்பை எடுத்து சென்றனர்.

தாய்மை குணத்துடன் உடும்பின் நிலை கண்டு உடனே தகவல் தெரிவித்த உஷா ராஜேந்தருக்கு காவல் துறையினரும், வனவிலங்கு அதிகாரிகளும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நடிகர் சிலம்பரசன் அண்மையில் தான் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்தார். இதனிடையே சிம்புவின் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also Read: வந்தாச்சு பிரபல நிகழ்ச்சியின் 2வது சீசன்!.. நடுவர்களாக பிரபல நடிகையும் நடன மாஸ்டரும்!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

actor silambarasan mother usha rejendar viral activity

People looking for online information on Silambarasan TR, T rajender, Usha Rajendar will find this news story useful.