www.garudabazaar.com

LATEST: GVM - சிம்புவின் புதிய படத்தில் இணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை! படம் வேற லெவல் தான்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான், சிம்பு மற்றும் கௌதம் மேனன் ஆகிய மூவர் கூட்டணி அடுத்து இணையும் படத்திற்கு ‘வெந்து தணிந்தது காடு’ என பெயரிடப்பட்டுள்ளது.

famous actress joined with GVM-STR venthu thaninthathu kaadu

இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். கவிஞர் தாமரை பாடலாசிரியராக ஒப்பந்தமாகியுள்ளார். மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு இந்த படத்தில் நடிக்கிறார். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.

famous actress joined with GVM-STR venthu thaninthathu kaadu

கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே நான் கடவுள், அங்காடி தெரு, 2.O, பாபநாசம், சர்கார், இந்தியன்-2, பொன்னியன் செல்வன், விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

famous actress joined with GVM-STR venthu thaninthathu kaadu

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. இந்த படத்தில் சிம்புவுடன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ராதிகா இணைந்துள்ளார்.

 

இதனை அவர் அதிகாரப்ப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.

 

கலை இயக்குனர் ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளரும் கௌதம் மேனனின் தங்கையுமான உத்தாரா மேனனும் படப்பிடிப்பில் சமைத்து மதிய உணவை பரிமாறியதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

famous actress joined with GVM-STR venthu thaninthathu kaadu

People looking for online information on Gautham Vasudev Menon, Silambarasan TR will find this news story useful.