www.garudabazaar.com

உலகநாயகன் கமல்ஹாசன் - பா. ரஞ்சித் திடீர் சந்திப்பு!!! பின்னணி என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் கடந்த ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. 70 களில் சென்னையில் பிரபலமாக இருந்த சூளைப் பகுதியைச் சேர்ந்த இடியாப்ப நாயகர் பரம்பரைக்கும், ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சார்பட்டா பரம்பரைக்கும் இடையே நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது.

pa ranjith kamal haasan arya meeting regarding

சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று பாராட்டுகளை குவித்து வருகிறது. இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரமுகர்களும் பார்த்துவிட்டு தங்களது பாராட்டுக்களை குவித்து வண்ணம் உள்ளனர்.

pa ranjith kamal haasan arya meeting regarding

அந்த வகையில்  உலக நாயகன் கமலஹாசன் படம் பார்த்துவிட்டு இயக்குனர் பா. ரஞ்சித் தலைமையிலான படக்குழுவினரை நேரில் அழைத்து தனது பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

அதில் 'சார்பட்டா படத்தில் வரும் அந்த உலகத்தை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன், எனக்கு தெரிந்தவர்கள் என் நண்பர்கள் பலர் பாக்சர்களாக இருந்திருக்கிறார்கள். எனக்கு படம் பார்க்கும்பொழுது அந்த காலகட்டத்தை நேரடியாக பார்ப்பதைப்போல இருந்தது, சார்பட்டா திரைப்படம் மக்களுக்கு நெருக்கமான ஒரு திரைப்படமாக இருக்கிறது, வெற்றிகரமான ஒரு திரைமொழியோடு மக்களை வெகுவாக கவர்ந்து , மக்களிடம் சென்று சேரும் விதமான ஒரு கூட்டு உழைப்பாக அற்புதமான படமாக இருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் பாராட்டும் வகையில் நடித்திருக்கிறார்கள். நான் மிகவும் ரசித்தேன் . பா.இரஞ்சித் தனது கருத்துக்களை எளிதாக மக்களிடம் கொண்டுசேர்க்க ஒரு திரைமொழியை கையாண்டிருக்கிறார், அது ரசிக்கும்விதமாகவும் , பாராட்டும் விதமாகவும் இருக்கிறது.  இயக்குனர் இரஞ்சித் உள்ளிட்ட குழுவினருக்கு எனது வாழ்த்துக்களும் அன்பும்..." என்று உலக நாயகன் பாராட்டியிருக்கிறார்.

pa ranjith kamal haasan arya meeting regarding

புறக்கணிக்க முடியாத வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் பா.இரஞ்சித், மற்றும் குழுவினருக்கும், இதில் நடித்த நடிகர்கள் தொழில் நுட்பகலைஞர்களுக்கும் உலக நாயகனின் வாழ்த்து பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள் சார்பட்டா படக்குழுவினர்.

pa ranjith kamal haasan arya meeting regarding

ஏற்கனவே 'பரியேறும் பெருமாள்' படத்தை பார்த்துவிட்டு நடிகர் கமல்ஹாசன், இயக்குனர்கள் பா. ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜை நேரில் அழைத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

pa ranjith kamal haasan arya meeting regarding

தற்போது கமல்ஹாசன் விகரம் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. "விக்ரம்" படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

pa ranjith kamal haasan arya meeting regarding

People looking for online information on Kamal Haasan, Pa Ranjith, Sarpatta Parambarai Tamil will find this news story useful.