www.garudabazaar.com

சர்ச்சைக்குள்ளான சமந்தா நடனம் ஆடிய புஷ்பா பட பாடல்!!.. ஆண்கள் சங்கம் தொடர்ந்த வழக்கு?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா படத்தின் முதலாம் பாகம் வரும் டிசம்பர் 17-ஆம் தேது வெளியாகிறது.

plea over samantha danced allu arjun pushpa song

முட்டம்செட்டி மீடியாவுடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்சின் நவீன் எர்நேனி மற்றும் ஒய் ரவி ஷங்கர் ஆகியோர், புஷ்பா படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

முன்னதாக இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி பட்டையை கிளப்பியது. ஆந்திர காடுகளில் செம்மரக் கடத்தல் வியாபாரம் செய்யும் புஷ்பராஜாக அல்லு அர்ஜூன் வேற லெவலில் நடித்து மிரட்டியிருப்பதை டிரெய்லரில் காண முடிகிறது, குறிப்பாக ட்ரெய்லரின் ஓரிடத்தில், “புஷ்பா என்றால் ஃப்ளவர் (பூ-புஷ்பம்) அல்ல ஃபைர்டா (நெருப்பு)” என்று மாஸாக பேசுகிறார். இப்படத்தில் ஃபகத் ஃபாசில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரமும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது. காரணம் ஃபகத் ஃபாசிலின் மிரட்டலான கெட்டப் தான். மொட்டை அடித்துக்கொண்டு புதிய கெட்டப்பில் தோன்றும் ஃபகத் ஃபாசிலின் நடிப்பு மற்றும் கேரக்டர் இந்த படத்துக்கு இன்னொரு பலமாக அமைந்துள்ளதாக தெரிகிறது.

இந்த படத்துக்காக முதல் முறையாக ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தண்ணா ஆகியோர் இப்படத்திற்காக கைகோர்த்துள்ளனர். இயக்குநர் சுகுமார் இப்படத்தை இயக்க, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.  இந்த படத்தில் நடிகை சமந்தா, ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து, இந்த பாடலுக்காகவும் இந்த படத்துக்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சமந்தா நடனம் ஆடிய இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், “ஓ அண்டா வா மாவா.. ஓஓ அண்டா வா மாவா” என்கிற இந்த பாடல் வரிகள் தெலுங்கில் இடம் பெற்றுள்ளன. தமிழிலும் இந்த பாடல் ‘ஓ சொல்றியா மாமா.. ஓஓ சொல்றியா மாமா’ என்கிற வரிகளைக் கொண்டு வெளியாகியுள்ளது.

தமிழில் இந்த பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார். விவேகா இந்த பாடலை எழுதியுள்ளார். இந்நிலையில், ஒரு பெண் எவ்விதம் ஆடை அணிந்திருப்பினும், என்ன நிறம், உயரம், தோற்றமாக இருப்பினும், எப்படி பேசினாலும் ஆண்களின் புத்தி வக்கிரம் நிறைந்ததாக இருப்பதாக இந்த பாடல் பொருள் தருவதாகவும், அனைத்து ஆண்களையும் இந்த வரிகளின் கருத்துக்கள் தவறாக சித்தரிப்பதாகவும், இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு ஆண்கள் சங்கத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

நடிகை சமந்தா தமிழி டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார். முன்னதாக சமந்தா நடித்துள்ள யசோதா மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்திலான காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் லைன் அப்பில் உள்ளன.

சர்ச்சைக்குள்ளான சமந்தா நடனம் ஆடிய புஷ்பா பட பாடல்!!.. ஆண்கள் சங்கம் தொடர்ந்த வழக்கு?! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

plea over samantha danced allu arjun pushpa song

People looking for online information on Andrea Jeremiah, Oh antava, Oh solreya pushpa song, Oh solreya samantha pushpa song, Oh solreya samantha song, Oh solreya samantha video, Samantha, Samantha pushpa dance video, Samantha pushpa song, Samantha ruth prabhu will find this news story useful.