www.garudabazaar.com
iTechUS

நடிகர் கவுண்டமணியின் அடுத்த பட டைட்டில் இதுவா?! .. பூஜையுடன் வெளியான புகைப்படங்கள்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கவுண்டமணி நடிக்கும்  நடிக்கும் "பழனிச்சாமி வாத்தியார்" படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது. வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் மதுரை செல்வம் பிரமாண்டமாக தயாரிக்கும்  இரண்டாவது படம் " பழனிச்சாமி வாத்தியார் "

actor goundamani new film pazhanichamy vathiyaar

Also Read | Aparna Balamurali : நடிகை அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறிய ரசிகர்.. மேடையில் மன்னிப்பு.!

அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ரசிகர்கள் மனதில் தனி சிம்மாசனமிட்டு இருப்பவர் காமெடி கிங் கவுண்டமணி. சமூக அக்கறைகொண்ட விஷயங்களைகூட போகிற போக்கில் தனது வசனத்தால், உடல்மொழியால் விதைத்து செல்லும் வித்தை கவுண்டமணிக்கு கைவந்த கலை. தமிழக மக்களின் நகைச்சுவை விருந்தாகவும் மருந்தாகவும் எப்போதும் தனது பங்களிப்பை செய்துவரும் கவுண்டமணி நகைச்சுவை அரசன்  இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

actor goundamani new film pazhanichamy vathiyaar

அவருடன் யோகி பாபு, கஞ்சா கருப்பு இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.  மற்றும் ராதாரவி, சித்ரா லட்சுமணன், T.சிவா, மனோபாலா, J.S.K. சதீஷ் குமார், நந்தகோபால் R.K. சுரேஷ்,மதுரை  டாக்டர் சரவணன்,  மங்கை அரிராஜன், திருச்சி சுரேந்தர், சாந்தகுமார்,  ஆகிய 11 தயாரிப்பாளர்களும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள். மற்ற நடிகை நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

actor goundamani new film pazhanichamy vathiyaar

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம்  எழுதி இயக்குகிறார் திரைப்பட கல்லூரி மாணவரான செல்வ அன்பரசன். wide angle ரவிசங்கர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அ.நாகராஜ் எடிட்டிங் செய்ய , கலை இயக்குனராக ராஜா பணியாற்றுகிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுத, இசையமைப்பாளர் K இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இவர் ஏற்கனவே கவுண்டமணி நடித்த 49 ஓ படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Executive Producer & Pro - மணவை புவன்.

Also Read | Thalapathy 67 : விஜய் & மிஷ்கின் இணையும் தளபதி 67 பட ஷூட்..! எங்க ? எப்போ ? தெறி அப்டேட்..

தொடர்புடைய இணைப்புகள்

actor goundamani new film pazhanichamy vathiyaar

People looking for online information on Goundamani, Pazhanichamy vathiyar will find this news story useful.