www.garudabazaar.com
iTechUS

“தம்பி நீ படிக்கிற பையன்”.. கலாய்த்த அமுதுவுக்கு விக்ரமனின் Thug Life பதில்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன், தற்போது மிகவும் முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டி இன்னும் ஒரு சில தினங்கள் மட்டும் மீதம் இருப்பதாக தெரியும் நிலையில் அனைவரின் எதிர்பார்ப்பும் யார் இந்த முறை டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட போகிறார்கள் என்பது பற்றியதாகத்தான் இருக்கிறது.

Amudhavanan and asal fun with vikraman in BiggBoss

Also Read | ஆனந்த் அம்பானியின் நிச்சயதார்த்தம்.. திரண்டு வந்த ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகம்.. வைரல் PHOTOS!

Finale வரை முன்னேறி இருந்த கதிரவன் மூன்று லட்ச ரூபாய் பணமூட்டை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ள நிலையில் அது சுமார் 10 லட்சம் ரூபாய் தாண்டி சென்று கொண்டிருப்பதாகவும், தற்போது உள்ள எந்த போட்டியாளர்களும் இதுவரை அதை எடுக்க முன்வரவில்லை என்றும் தெரிகிறது.

மறுபக்கம் விக்ரமன், அசிம், அமுதவாணன், மைனா நந்தினி மற்றும் ஷிவின் ஆகியோர் Finale-வுக்கு முன்னேறி உள்ள நிலையில், இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது பற்றியும் தங்களின் கருத்துக்களை ரசிகர்கள் சமூக வ வலை தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

Amudhavanan and asal fun with vikraman in BiggBoss

இது ஒருபக்கம் இருக்க, பிக்பாஸ் வீட்டினுள் பல நெகிழ்ச்சிகர சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. வீட்டினுள் இந்த போட்டியாளர்களின் பிக்பாஸ் அனுபவங்களை காட்சிப்படுத்தும் வகையில் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு போட்டியாளர்கள் பற்றிய காணொளியும் திரையிடப்படுகிறது. இதனையடுத்து பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகிறார். முன்னதாக அமுது, ஷிவின் மற்றும் மைனா ஆகியோர் தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பொருட்களை ஆச்சர்யத்துடன் பார்வையிட்டிருந்தனர்.

Amudhavanan and asal fun with vikraman in BiggBoss

முன்னதாக வீட்டுக்குள் இன்னும் நட்பாக இருந்திருக்கலாம் என கருதும் நபர்களுக்கு சிவப்பு வண்ண பட்டையை போட்டியாளர்கள் அணிவித்தனர். அப்போது, அனைவரும் சக போட்டியாளர்கள் குறித்து உருக்கமாகவும் பேசி இருந்தனர். இந்நிலையில், விக்ரமன், அமுது மற்றும் அசல் இடையே ஜாலியாக ஒரு தகராறும் நடந்திருக்கிறது.

வீட்டினுள் விக்ரமன் படுத்திருக்க  அங்கிருக்கும் அமுதவாணன் மற்றும் அசல் கோலார் ஆகியோர் விக்ரமனிடம் ஜாலியாக தகராறில் ஈடுபடுகின்றனர். "விக்ரமன் படிக்கிற பையன் நீ. பொங்குன்னு குத்திட்டு ஓடிருவேன்"  என சிரித்துக்கொண்டே அமுது சொல்கிறார். அப்போது அதனை கேட்டு சிரிக்கும் விக்ரமன்,"அமுதவாணா நான் அடிவாங்கிட்டு போற படிக்கிற பையன்னு நெனச்சிட்டு இருக்கியா?" என்கிறார். இதனை கேட்டு சிரிக்கும் அமுது, பஞ்ச் டயலாக்கை நோட் பண்ணுங்கப்பா என்கிறார்.

Amudhavanan and asal fun with vikraman in BiggBoss

அப்போது பிக்பாஸ்,"அமுதவாணன் உங்க மைக்கை மாட்டுங்க" எனக்கூற அங்கிருந்த மூவருமே இதை கேட்டு சிரிக்கின்றனர். இதனையடுத்து அங்கிருந்து ஓடிச்செல்லும் அமுது தனது மைக்கை தேடி கண்டுபிடித்து மாட்டிக்கொள்கிறார்.

Also Read | "மொத்த வீடும் எதிர்த்து நின்ற போதும்".. பிக்பாஸ் சொன்ன வாழ்த்து.. உடைந்து அழுத அசீம்..!

தொடர்புடைய இணைப்புகள்

Amudhavanan and asal fun with vikraman in BiggBoss

People looking for online information on Amudhavanan, Asal kolaar, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Vikraman will find this news story useful.