www.garudabazaar.com
www.garudabazaar.com

Video: கலைமாமணி விருது பெறும் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு மற்றும் கலைஞர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2019 மற்றும் 2020 ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

sivakarthikeyan yogibabu aishwarya rajesh gautham menon கலைமாமணி

அதன்படி இளம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. 2010-ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

sivakarthikeyan yogibabu aishwarya rajesh gautham menon கலைமாமணி

இதனையடுத்து நடிகர், நடிகையர், இலக்கியம், நடனம், இசை, நாடகம், தெருக்கூத்து, வில்லிசை, பம்பைக்கலைஞர், இசை நாடக நடிகர், மெல்லிசை கலைஞர் உள்ளிட்ட பிரிவுகளில் விருதுபெறும் கலைஞர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்த விருது பெறுவோர்களின் பட்டியலில் நடிகர் சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து நடிகர்கள் யோகி பாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி இடம் பெற்றுள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த விருதுகளை வழங்கியுள்ளார். 

sivakarthikeyan yogibabu aishwarya rajesh gautham menon கலைமாமணி

மேலும் இயக்குநர்கள் கவுதம் மேனன், ரவிமரியா,  பாடகர்கள் ஜமுனா ரவி, அனந்து, சுஜாதா, தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு,  ஐசரி கணேஷ், இசையமைப்பாளர் D இமான், தினா,  வசனகர்த்தா M பிரபாகர்  உள்ளிட்டோரும் இவ்விருதை பெறும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இதேபோல் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, பாடகி பி.சுசீலா மற்றும் நடன கலைஞர் அம்பிகா காமேஷ்வர் ஆகியோருக்கு 2019-ம் ஆண்டுக்கான புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டுக்கான புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா விருது பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, பாடகி ஜமுனா ராணி மற்றும் நடன கலைஞர் பார்வதி ரவி கண்டசாலா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: சக்ரா திரை விமர்சனம் Chakra (Tamil) Review

VIDEO: கலைமாமணி விருது பெறும் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு மற்றும் கலைஞர்கள்! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

sivakarthikeyan yogibabu aishwarya rajesh gautham menon கலைமாமணி

People looking for online information on Aishwarya Rajesh, D Imman, D. Imman, Gautham Menon, Kalaipuli S Thanu, Sivakarthikeyan, Sivakarthikeyan Productions will find this news story useful.