www.garudabazaar.com

கடும் குளிரில் 20 அடி ஆழ நீருக்கு அடியில் ஆர்யா.. ‘கேப்டன்’ படத்துக்காக எடுத்த முயற்சி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்யா நடிப்பிலான ‘கேப்டன்’ திரைப்பட டிரெய்லரின் காட்சிகள் அனைவரையும்  பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது, அதிலும் ஆர்யா ஒரு பெரிய வேற்றுகிரக உயிரினத்தை எதிர்கொள்ளும், இறுதி ஷாட் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.  இந்நிலையில் சவாலான அதிரடி ஆக்சன்  காட்சிகளை படமாக்கிய அனுபவத்தை நடிகர் ஆர்யா பகிர்ந்து கொண்டுள்ளார்.

Actor Arya 20 ft underwater for action sequence in Captain

Also Read | "எப்படி நடிச்சும் மணி சார் ஓகே சொல்லல.. அப்றம்.." - தளபதியில் ரஜினிக்கு கமல் சொன்ன செம டிப்ஸ்.!

இது குறித்து நடிகர் ஆர்யா கூறியதாவது:- “இப்படம் மிக புதுமையானதாக இருக்கும் . எனது கதாபாத்திரத்திற்கும் 120 அடி வேற்றுகிரக உயிரினத்திற்கும் இடையே ஒரு குறிப்பிட்ட ஆக்‌ஷன் காட்சி இதில் உள்ளது. அந்த காட்சியை படமாக்குவது பயங்கரமான சவாலாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. க்ளைமாக்ஸ் காட்சியை மூணாறில் எடுக்க முடிவு செய்திருப்பதாக சக்தி சௌந்தர்ராஜன் என்னிடம் தெரிவித்தபோது, குளிர்காலம் உச்சத்தில் இருக்கும் டிசம்பர் மாதம் என்பதால் என்னால் அதை  முழுமையாக செய்ய முடியுமா என்று கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. மழை காலத்தில் அதிரடி காட்சியை படமாக்குவது மிகவும் சவாலானதாக மாறியது.

Actor Arya 20 ft underwater for action sequence in Captain

அந்த காட்சியில் நான் கிரேன் மூலம் 20 அடி உயரத்திற்கு தூக்கிச் செல்லப்பட்டேன். அந்த உயரத்தில், அடுத்த 3 நாட்களுக்கு, அந்த காட்சியை  எடுக்கும் பணி பயங்கரமானதாக இருந்தது.  ஒருவழியாக எல்லாம் முடிந்துவிட்டதாக நான் நினைத்தபோது, ஜனவரி முதல் வாரத்தில் மும்பையில் 20 அடி ஆழத்தில் நீருக்கடியில் இன்னொரு  காட்சியை படமாக்க வேண்டும் என்று சக்தி மீண்டும் என்னிடம் கூறினார். அப்போது மிகவும் குளிர்காலம். குளிரில் படப்பிடிப்பு முற்றிலும் கடினமாக இருந்தது. படம் முழுக்கவே அனைவரும் மிகப்பெரிய உழைப்பை தந்துள்ளனர். டிரெய்லர் எல்லோரையும் கவர்ந்திருப்பதும் பல பக்கங்களிலிருந்து வரும் பாராட்டுக்களும் எங்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தின் ஆக்சன் காட்சிகளில் பார்வையாளர்களுக்கு மெய் சிலிர்க்கும் அனுபவம் கிடைக்கும்.

Actor Arya 20 ft underwater for action sequence in Captain

செப்டம்பர் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் “கேப்டன்” படத்தினை இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ளார். Think Studios உடன் நடிகர் ஆர்யாவின் The Show People இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது. ஆர்யாவுடன்  சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

Actor Arya 20 ft underwater for action sequence in Captain

தொழில்நுட்பக் குழுவில் S.யுவா (ஒளிப்பதிவு), D இமான் (இசை), பிரதீப் E ராகவ் (எடிட்டர்), S.S.மூர்த்தி (தயாரிப்பு வடிவமைப்பு), R.சக்தி சரவணன்- K கணேஷ் (ஸ்டண்ட்ஸ், சுரேஷ் சந்திரா-ரேகா D’One(மக்கள் தொடர்பு) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

Also Read | "பாத்துக்கலாம்.. கிடைக்குறது கிடைக்காம இருக்காது".. கமல், ரஜினி பஞ்ச்'களை பேசிய ஜெயம் ரவி.!

Tags : Arya, Captain

தொடர்புடைய இணைப்புகள்

Actor Arya 20 ft underwater for action sequence in Captain

People looking for online information on Arya, Captain will find this news story useful.