VTK D Logo Top
Sinam D Logo Top
www.garudabazaar.com

90S அம்மன் பட ‘குட்டி அம்மன்’ இப்போ டிராஃபிக் இன்ஸ்பெக்டரா..? - வைரல் ஃபோட்டோவின் பின்னணி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சினிமாவில் பலரும் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி நம்மை கவர்ந்திருக்கின்றனர். அந்த வகையில் 90களில் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்த நடிகைகள் இப்போது என்ன செய்கிறார்கள் என்பது பலரும் அறியாத விஷயமாக இருக்கிறது.

Ammoru aka Amman baby star Sunaina recent update

Also Read | Raghava Lawrence: “இனி என் அறக்கட்டளைக்கு நன்கொடை வேண்டாம்!” - லாரன்ஸின் திடீர் முடிவின் பின்னணி இதுவா?

1995ஆம் ஆண்டு வெளியான அம்மொரு என்கிற தெலுங்கு திரைப்படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படம் தான் அம்மன். பிரபல தெலுங்கு இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா இயக்கிய இந்த திரைப்படத்தில் சௌந்தர்யா, வடிவுக்கரசி, சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் என்று பலரும் நடித்திருக்கின்றனர். இதில் பெரிய அம்மனாக ரம்யா கிருஷ்ணனும், குட்டி அம்மனாக சுனைனாவும் நடித்திருப்பார்கள். இந்த குட்டி அம்மனாக வரும் சுனைனா ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்.

Ammoru aka Amman baby star Sunaina recent update

திருமணம் செய்துகொண்டு என ஒரு பக்கம் செட்டில் ஆகிவிட்டாலும், இன்னொரு புறம் தன்னுடைய நடிப்புக்கு ஓய்வு கொடுக்கவில்லை. தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக சுமார் 25 திரைப்படங்கள் நடித்துவிட்ட இவர், 1996 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பால ராமாயணம் திரைப்படத்தில் கடைசியாக குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதன் பிறகு அண்மையில் தொடர்ந்து திரைப்படங்களில் ரீ எண்ட்ரி கொடுத்து வருகிறார். சமந்தா நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான ஓ பேபி திரைப்படத்தில் நடிகர் ராஜேந்திர பிரசாத்துக்கு மகளாக நடித்திருந்தார். நடிகர் அஜீத் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படத்தில் அஜீத்தின் சகோதரியாக நடித்திருந்தார்.

Ammoru aka Amman baby star Sunaina recent update

இந்த நிலையில் இவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று பார்க்கும் பொழுது, சிலர் இவர் இப்போது டிராபிக் இன்ஸ்பெக்டராக இருக்கிறாரா? என்று ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்து இணையத்தில் பேசி வருகின்றனர். ஆனால் உண்மையில் வாழ்க்கையில் விரக்தி அடையும் பெண்கள் செய்யக்கூடிய, பேசக்கூடிய புலம்பல்களை நகைச்சுவை கான்செப்டாக மாற்றி ஃபிரஸ்ட்ரேட்டடு  வுமன் என்கிற பெயரில் சிறு நகைச்சுவை சிறு தொடரில் இவர் நடித்து தமது சமூக வலைப்பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

Ammoru aka Amman baby star Sunaina recent update

இது தொடர்பான ஒரு கான்செப்டில்தான் டிராபிக் கான்ஸ்டெபிளாக உட்கார்ந்து இருக்கும் ஒரு பெண் என்னவெல்லாம் புலம்புவாரோ, அதை அத்தனையும் நகைச்சுவையாக புலம்பி தமது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அந்த கான்செப்டும் அதில் சுனைனாவின் நடிப்பும் வேற லெவலில் இருப்பதாகவும் பதிவிட்டு இருக்கின்றனர்.

Also Read | D23 Expo: பிரம்மாண்டமாக உருவாகும் ‘மகாபாரத்’ வெப் சீரிஸ்..!! பிரபல ஓடிடி அறிவிப்பு.!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ammoru aka Amman baby star Sunaina recent update

People looking for online information on Amman, Ammoru, Sunaina Badam will find this news story useful.