www.garudabazaar.com

"பாவனியை ஏன் யாருமே நாமினேட் பண்ல?.. இதுதான் காரணம்".. போட்டு உடைத்த அபிஷேக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் அபிஷேக் - பாவனி இருவருக்கும் இடையிலான உரையாடல்கள் நெகிழ்ச்சியானவையாக இருந்து வந்துள்ளன.

Abishek revelas about pavani eviction nomination biggbossTamil5

பாவனியை பற்றிய அபிஷேக்கின் புரிதலையும் அவர் பலமுறை வெளிப்படுத்தியுள்ளார். கணவரை இழந்த 4 வருடங்கள் கழித்தும் வேலைதான் தனக்கு ஊக்கம் அளிப்பதாக பாவனி கூறியதை அபிஷேக் ஆதரித்ததுடன், நமக்கு கிடைக்காதவை பின்னால் போகக் கூடாது என்று பாவனி கூறும்போது அதை மறுத்து பாவனிக்கு ஆறுதல் கூறினார்.

Abishek revelas about pavani eviction nomination biggbossTamil5

இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் அபிஷேக் ராஜா ஒரு ரிவியூவராகவே திகழ்கிறார். ஆம், பல போட்டியாளர்கள் குறித்து தனது ஸ்டைலில் விவரணைகள் கொடுத்து வருகிறார். அப்படி பேசும்போது பாவனி குறித்து, அபிஷேக் ராஜா மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.

Abishek revelas about pavani eviction nomination biggbossTamil5

முன்னதாக ஒரு எபிசோடில் ஆண் போட்டியாளர்கள் குறித்து அவர்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்த அபிஷேக் ராஜா, வருண் ஒரு பணக்கார தயாரிப்பாளராக இருந்தபோதிலும் எதார்த்தமாக இருப்பதாகவும், ‘மாஸ்டர்’ சிபி ஒரு விஷயம் கிடைக்கவில்லை என்றபோதிலும் அதற்காக வருத்தப்படுபவர் இல்லை என்றும், ஜெமினி- சாவித்ரி பேரனான அபினய் குறித்து பேசும்போது என்றும் அபிஷேக் ராஜா விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

Abishek revelas about pavani eviction nomination biggbossTamil5

இந்நிலையில் தற்போது பெண் போட்டியாளர்கள் குறித்து பேசியுள்ள அபிஷேக் பாவனி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட, மற்ற ஹவுஸ் மேட்ஸ் யாராலும் நாமினேட் செய்யப்படாதது குறித்து பேசி இருந்தார். அதன்படி, “பாவனி ஏன் யாருமே நாமினேட் பண்லனா.. அவருடைய கதை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ” என்று அபிஷேக் கூறியுள்ளார்.

Abishek revelas about pavani eviction nomination biggbossTamil5

கதை சொல்லும் டாஸ்கில் பேசியிருந்த பாவனி, தனது கணவரின் எதிர்பாராத தற்கொலைக்கு தான் தான் காரணம் என பலர் கூறிவந்தாலும், தனது கணவரின் குடும்பம் தன்னை அரவணைத்துக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் அந்த டாஸ்க்கில் பிக்பாஸ் மூலமாக அனைவருக்கும் தன் மனநிலையை வெளிப்படுத்தியதன் மூலமாக தன் மனபாரத்தை இறக்கி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த காட்சி புரோமோவில் இடம் பெற்றுள்ளது. எனினும் நிகழ்ச்சியில் இடம் பெறவில்லையே ஏன்? என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

Also Read: பாவனி இப்ப உங்களுக்கு Wife-ஆ? Friend-ஆ? .. Ex காதலர் சொன்ன பதில் என்ன தெரியுமா? வைரல் ஆகும் Post!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Abishek revelas about pavani eviction nomination biggbossTamil5

People looking for online information on AbishekRaaja, AbishekRaja, Biggboss, BiggBossTamil5, Pavani Reddy will find this news story useful.