www.garudabazaar.com

‘பிக்பாஸ்’ நடிகரின் கையை சரமாரியாக கடித்த நடிகை!! வெளியான பரபரப்பு வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹைதராபாத்தில் தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் சீனியர் நடிகரான பிரகாஷ் தலைமையிலான அணியும், இதேபோல், விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணியும் போட்டியிட்டது.

actress hema bites biggboss sivabalaji during election video

இவ்வாறு நடந்து முடிந்த இந்த தேர்தலில், விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தபோது பிரகாஷ் ராஜ் அணியில் துணை தலைவர் பதவிக்கு நடிகை ஹேமா போட்டியிட்டிருந்தார்.

அப்போது அவர் நடிகர் சிவபாலாஜியின் கையை கடித்துவிட்டார். இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ தான் அதன் பிறகு இணையத்தில் வெளியாகி வைரலானது. பின்னர், இதுகுறித்த தகவலாக, நடிகர் சமீருடன், நடிகர் சிவபாலாஜியுடன் சண்டை போட்டதாக தகவல்கள் தெரியவந்தன.

வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன், இன்னும் சொல்லப்போனால், தேர்தல் நடப்பதற்கு முன்பு விஷ்ணு மஞ்சுவும், பிரகாஷ் ராஜும் கட்டியணைத்துக் கொண்டார்கள். அப்பொழுது எல்லாம் நன்றாக நடந்தது. அதன்பிறகே இந்த இரு அணிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டது.

இதில்தான் நடிகை ஹேமா, நடிகர் சிவபாலாஜியின் கைகளை கடித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய சிவபாலாஜி, “அடையாளம் தெரியாத யாரோ ஒருவர் எங்கள் அணிக்காக பிரசாரம் செய்ய, அதற்கு நான் என்னுடைய எதிர்ப்பினை தெரிவித்தேன். அப்பொழுது என் பின்னால் நின்று கொண்டிருந்த நடிகை ஹேமா என் கையை கடித்துவிட்டார். ஆனால் அவர் ஏன் கடித்தார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் சிவபாலாஜியை ஏன் கடித்தீர்கள் என ஹேமாவிடம் கேட்ட ஊடகங்களிடம்,  “நான் ஏன் கடித்தேன் என்பதை சிவபாலாஜியிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்” என்று கூறிவிட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சிவபாலாஜி, முன்னதாக தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு முக்கியமான போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

actress hema bites biggboss sivabalaji during election video

People looking for online information on Actor, Actor sivabalaji, Actress, Actress hema, Biggboss sivabalaji, Biggbossactor, Biggbosstelugu, Telugu actress hema will find this news story useful.